(UTV | கொழும்பு) – நாளாந்தம் பி சி ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையினை 15,000 ஆக அதிகரிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தமிழ் சிங்கள புதுவருடத்திற்கு பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள அபாய நிலைமையினை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் நேற்று இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள கட்டில்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கவும் நோயாளிகளுக்கு தேவையான அதிக உயர் அழுத்தத்திலான
ஒக்ஸிஜன் வழங்கவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிராந்திய மற்றும் மாவட்ட மட்டத்தில் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான வைத்தியசாலைகளை உருவாக்கி அதற்கான வசதிகளை வழங்கவும் இதன் போது வலியுறுத்தப்பட்டுள்ளது,
அத்துடன் தனிமைப்படுத்தல் விதிகளை கடுமையாக அமுல்படுத்தவும் இதனை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் தீர்மானிக்கப்படடுள்ளது.
இதேவேளை, வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் உள்ள 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வருகைத்தந்த நிலையில், வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்களே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உள்ளதாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.