கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் : இன்றும் விசாரணைக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இன்று (23) ஐந்தாவது நாளாக உயர்நீதிமன்றில் ஆரம்பமாகியுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனெக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்ணான்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன.

நேற்றைய தினம் குறித்த மனுக்கள் மீதான விசாரணை நான்காவது நாளாக இடம்பெற்ற நிலையில் இன்று காலை 10.00 மணிவரை விசாரணைகளை ஒத்தி வைத்து நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டிருந்தனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கேபண்டார, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க, இலஙகை சட்டத்தரணிகள் சங்கம், மாற்று கொள்கை கேந்திரம், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, தகவல் தொழிநுட்ப தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவரான பொறியியலாளர் ஜீ.கபில ரேணுக பெரேரா உள்ளிட்ட தரப்பினர்களால் சுமார் 20 மனுக்கள் இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *