நியூசி.டெஸ்ட் தொடரில் இருந்து ஆர்ச்சர் விலகல்

(UTV |  லண்டன்) – கைவிரல் காயத்துக்கு அறுவை சிகிக்சை செய்து கொண்ட இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஐ.பி.எல். போட்டியில் இருந்தும் ஒதுங்கினார்.

கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடந்த இந்திய பயணத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடினார். கைவிரல் மற்றும் வலது முழங்கையில் ஏற்பட்ட காயத்தின் பாதிப்பு அதிகரித்ததால் அவர் ஒருநாள் போட்டி தொடரில் இருந்து விலகி நாடு திரும்பினார். கைவிரல் காயத்துக்கு அறுவை சிகிக்சை செய்து கொண்ட அவர் ஐ.பி.எல். போட்டியில் இருந்தும் ஒதுங்கினார்.

இதற்கிடையில் காயத்தில் இருந்து தேறிய ஜோப்ரா ஆர்ச்சர் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் கடந்த வாரம் நடந்த கென்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சசெக்ஸ் அணிக்காக களம் இறங்கினார். இதில் முதல் இன்னிங்சில் 13 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டை வீழ்த்திய ஜோப்ரா ஆர்ச்சர் 2-வது இன்னிங்சில் 5 ஓவர்கள் பந்து வீசிய நிலையில் கையில் வலி ஏற்பட்டதால் தொடர்ந்து பந்து வீசவில்லை.

ஜோப்ரா ஆர்ச்சருக்கு முழங்கையில் மீண்டும் வலி ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்து இருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் டாக்டரிடம் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. அவருக்கு முழங்கையில் ஆபரேஷன் செய்ய வேண்டியது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜூன்) 2ம் திகதி தொடங்க இருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் இருந்து காயம் காரணமாக ஜோப்ரா ஆர்ச்சர் விலகி இருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *