(UTV | கொழும்பு) – டி20 உலகக் கிண்ணத்திற்காக இலங்கை அணியை தேர்வு செய்யும் உறுப்பினர், மலிங்காவிடம் இருந்து இன்னும் உறுதியான பதில் வரவில்லை என்கிறார்கள்.
இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் டி20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.
இலங்கை அணிக்காக விளையாடி சுமார் ஒரு வருடம் ஆகிறது. எல்லா நாடுகளும் டி20 உலகக் கிண்ண அணியை தேர்வு செய்வதில் தயாராக உள்ளன. ஆனால் இலங்கை அணியில் மலிங்க இடம் பெறுவாரா? என்பதை தேர்வாளர்கள் உறுதி செய்ய முடியாமல் இருக்கின்றனர்.
இது குறித்து இலங்கை அணி தேர்வு குழுவில் இடம் பிடித்துள்ளவர்களில் ஒருவரான பிரமோத்யா விக்ரமசிங்கே கூறுகையில் “மலிங்கா சிறந்த 20 கிரிக்கெட் வீரர், அவருடைய சேவை எப்போதுமே அணிக்கு முக்கியமானது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அனைத்து வீரர்கள் எங்களுக்கு ஒரே மாதிரிதான். தேர்வில் ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளைத்தான் பயன்படுத்துவோம்.
நான் மலிங்கவை தொடர்பு கொண்டு, இந்த வருடம் நடைபெறும் டி20 உலகக் கிண்ணத்தில் விளையாடும் நம்பிக்கை உள்ளதா? என்றார். அவர் என்னிடம், கடந்த ஒன்றிரண்டு ஆண்டாக கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்று தெரிவித்தார்.