பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்ப்ரஸ் பேர்ல் (MV XPress Pearl) கப்பலால் இலங்கை வாழ் மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் அவர்களுக்குரிய நிவாரணங்களை வழங்குவதற்கு முறையான நடவடிக்கைகளை தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடலில் எண்ணெய் கசிவுகள் இடம்பெற்ற சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட மீனவர்களை மறந்தது போல, இந்த முறையும் செயற்பட வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் சுற்றாடல் பாதிப்பை சரியாக கணிப்பிடப்பட்டு அதற்கான இழப்பீட்டையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கர்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *