ஆரம்பநிலை நீதிமன்றத்தை நிறுவ அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) –    நீதித்துறையின் தாமதங்கள் எமது நாட்டில் முக்கிய தீர்மானம்மிக்க கட்டத்தை அண்மித்துள்ளதால், அதற்குத் தாக்கம் செலுத்தும் பிரச்சினைகளைக் கவனத்தில் கொள்வதற்காகவும், நீதியைப் பெற்றுக் கொடுக்கும் செயன்முறையை மீண்டும் உயிர்ப்பூட்டுவதற்கும், வலுவூட்டுவதற்கும் திட்டமிடலுடன் கூடிய, இலக்குகளுக்கமைவான அணுகுமுறையொன்றுக்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, முன் வழக்கு விசாரணை மற்றும் ஆரம்பநிலை நீதிமன்றங்களை தாபித்தல் தொடர்பான ஆய்வுக் கற்கையை மேற்கொள்வதற்காக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ருவன் பர்னாந்து அவர்களின் தலைமையில் நீதி அமைச்சர் அவர்கள் குழுவொன்றை நியமித்துள்ளார்.

குறித்த குழு சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, கீழ்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஆரம்பநிலை நீதிமன்றங்களை தாபிப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை வகுக்கும் வகையில் 1978 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க நீதித்துறை சட்டத்தை திருத்தம் செய்தல்

ஆரம்பநிலை நீதிமன்றங்கள் தொடர்பான விசேட நடைமுறைகளுக்கான ஏற்பாடுகளை வகுப்பதற்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில் சட்டமூலத்தை தயாரித்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *