கிரிக்கெட் தடையிலிருந்து அஸ்வின் தப்பியது எவ்வாறு?

(UTV |  இஸ்லாமாபாத்) – பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளராக இருந்து சிறப்பாக செயல்பட்டவர் சயீத் அஜ்மல். ஆனால் அவருடைய பந்துவீச்சின் முறைமைகள் கிரிக்கெட் விதிமுறைகளுக்கு எதிரானது எனக்கூறி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தடை விதிக்கப்பட்டதையடுத்து சயீத் அஜ்மல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இந்திய வீரர் அஸ்வினுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தும் அவர் தப்பிவிட்டார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார்.

கிரிக்விக் இணையதளத்துக்கு பேட்டியளித்த அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் இது தொடர்பில் தெரிவிக்கையில்;

“.. கிரிக்கெட்டின் விதிமுறைகளை யாரைக் கேட்டு அடிக்கடி மாற்றுகிறார்கள் எனத் தெரியவில்லை. நான் கடந்த 8 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுகிறேன். ஆனால் அனைத்து விதிமுறைகளும் என் மீதே விழுந்தது. அந்தக் காலக்கட்டத்தில் அஸ்வின் ஏன் 6 மாத காலம் விளையாடாமல் இருந்தார்? அப்போது அவருக்கு உதவி அளிக்கப்பட்டது. அவருடைய பந்துவீச்சு போடும் முறை மாற்றப்பட்டது. அதனால் ஐசிசியின் தடையில் இருந்து அவர் தப்பித்தார். ஆனால் பாகிஸ்தான் வீரர்களை பற்றி யாருக்கும் கவலையில்லை. அவர்களுக்கு பணம்தான் முக்கியம்.

2011 உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் என்னுடைய பந்துவீச்சில் சச்சின் டெண்டுல்கர் எல்பிடபுள்யூ ஆனார். ஆனால் நடுவர் அவருக்கு அவுட் கொடுக்கவில்லை. அதனால் அவர் சிறப்பாக தொடர்ந்து விளையாடினார். இப்போது கூட டிவியில் அதைப் பார்க்கும்போது மிக எளிதாக தெரியும் சச்சின் அவுட்டென்று. இது தொடர்பாக பலரும் என்னிடம் கேட்டுவிட்டனர், ஆனால் அம்பயரின் அந்த முடிவு குறித்து என்னிடம் பதில் இல்லை..” எனத் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *