(UTV | கொழும்பு) – நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சூழலில் அரிசியின் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளன.
இந்த அசாதாரண சூழ்நிலையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பானது நடுத்தர வகுப்பு மக்களை மேலும் இன்னலுக்குள்ளாக்கும் செயல் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
98 ரூபாவிற்கு காணப்பட்ட நாட்டரிசி கிலோ ஒன்று தற்போது 120 முதல்125 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
84 மற்றும் 85 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளை மற்றும் சிவப்பு அரிசி 100 முதல் 115 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ சம்பா அரிசி 155 முதல் 160 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோகிராம் கீரி சம்பா 215 முதல் 220 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
எனவே இந்த விலையேற்றம் தொடர்பில் அரசாங்கம் பொதுமக்கள் சார்பாக தீர்மானங்களை மேற்கொள்ள முன்வரவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.