ஜப்பானை சுழற்றும் ‘லூபிட்’

(UTV |  ஜப்பான்) – ஜப்பானில் சக்தி வாய்ந்த புயலான லூபிட் கரையை கடக்க உள்ள நிலையில் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

சீனா மற்றும் தைவானில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய லூபிட் என்ற புயல் தற்போது ஜப்பானை நெருங்கி வருகிறது. இது ஜப்பானின் தெற்கு மற்றும் தென்மேற்கு பிராந்தியங்களை தாக்கும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஜப்பானின் ஹிரோஷிமா, ஷிமனே மற்றும் எஹிம் ஆகிய 3 பிராந்தியங்களிலும் லூபிட் புயலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கூறிய 3 பிராந்தியங்களில் இருந்து 3 லட்சத்துக்கும் அதிகமான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *