பூஸ்டர் தடுப்பூசி தொடர்பிலான அறிவிப்பு

(UTV |  ஜெனீவா) – டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 3-வது டோஸ் அவசியம் என்று கருதுகின்றன.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்த தடுப்பு மருந்துகள் இரண்டு தடுப்பூசி டோஸ்களாக போடப்படுகின்றன.

இதற்கிடையே பல நாடுகள் தங்களது குடிமக்களுக்கு 3-வது டோஸ் தடுப்பூசியை (பூஸ்டர் டோஸ்) செலுத்த முடிவு செய்துள்ளன.

டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 3-வது டோஸ் அவசியம் என்று கருதுகின்றன.

ஆனால் 3-வது டோஸ் திட்டத்துக்கு உலக சுகாதார அமைப்பு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இதனால் உலகளவில் தடுப்பூசியின் சமத்துவமின்மை மற்றும் புதிய கொரோனா மாறுபாடு ஏற்படும் என்றும், ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வினியோகத்தில் பாதிப்பு உண்டாகும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆனாலும் உலக சுகாதார அமைப்பின் சேர்க்கையை பல நாடுகள் நிராகரித்துள்ளன.

இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி டோஸ் செலுத்து வதை 2 மாதத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் கூறும்போது, சிறிய மக்கள் தொகை கொண்ட நாடுகள் தடுப்பூசியின் முதல் மற்றும் 2-வது டோஸ் செலுத்த சிரமப்பட்டு வருவது கவலை அளிக்கிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *