திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்ய அனுமதி

(UTV | கொழும்பு) – திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்காக, ட்ரின்கோ பெற்றோலியம் டேர்மினல் லிமிடட் (Trinco Petroleum Terminal Ltd) என்ற நிறுவனத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பான ஒப்பந்தம் ஒரு வாரத்திற்குள் கைச்சாத்திடப்படும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எண்ணெய் களஞ்சியத்தை முகாமைப்படுத்துவதற்காக இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் துணை நிறுவனமாக இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலை எண்ணெய் களஞ்சிய சாலையில் உள்ள 99 குதங்களில் தற்போது லங்கா ஐ ஓ சி நிறுவனம் பயன்படுத்தும் 14 குதங்கள், மீண்டும் 50 வருட காலத்திற்காக அவர்களுக்கே குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன.

அத்துடன், மேலும் 61 குதங்கள், எண்ணெய் களஞ்சிய சாலையை அபிவிருத்தி செய்வதற்காகப் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட ட்ரின்கோ பெற்றோலியம் டேர்மினல் தனியார் நிறுவனத்தின் மூலம் கூட்டாக நிர்வகிக்கப்படவுள்ளது.

அந்த நிறுவனத்தின், 51 சதவீத பங்குகளை இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனமும், 49 சதவீத பங்குகளை லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் கொண்டிருக்கும்.

இதுதவிர, திருகோணமலை எண்ணெய் களஞ்சிய சாலையின் எஞ்சிய 24 குதங்களுக்கான பங்குகளை இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் கொண்டிருக்கும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *