தென்னாபிரிக்க பாராளுமன்ற கட்டடத்தில் மீண்டும் தீ

(UTV |  தென்னாபிரிக்கா) – தென்னாபிரிக்க பாராளுமன்ற கட்டடத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக நேற்று (03) அறிவிக்கப்பட்டிருந்த போதும் மீண்டும் தீ பரவி விருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தென்னாபிரிக்க தலைநகர் கேப் டவுனிலுள்ள பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று முன்தினம் (02) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

இதில் கட்டடத்தின் கூரை மற்றும் கீழ் தளத்திற்கு முற்றாக சேதம் ஏற்பட்டது.

விடுமுறை காரணமாக அமர்வுகள் இல்லை என்பதால் யாருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் கண்டனம் தெரிவித்துள்ள தென்னாபிரிக்க ஜனாதபிதி சிரில் ரமபோச, விபத்து இடம்பெற்ற பகுதிக்குச் சென்று பார்வையிட்டதுடன் சபை அமர்வுகள் தடை இன்று (04) நடைபெறும் என அறிவித்திருந்தார்.

இதனிடையே தீ விபத்து தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாராளுமன்றத்தில் சேவை புரியும் நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *