அத்தியவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதில் சிக்கல்

(UTV | கொழும்பு) – அத்தியவசியமான சுமார் 80 மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான கடன் பத்திரங்களை திறப்பது சம்பந்தமான பிரச்சினையை அரசாங்கம் எதிர்நோக்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்த மாதம் 18 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டிய 500 மில்லியன் டொலர் கடன் தவணையை செலுத்தும் வரை மத்திய வங்கி, மருந்து இறக்குமதிக்கான டொலர்களை வெளியிடாமல் இருப்பது இதற்கான காரணம் எனவும் தெரியவருகிறது.

இப்படியான நிலைமையில், அத்தியவசிய மருந்துகளை கடனுக்கு பெறுவது சம்பந்தமாக அரசாங்கம், சீனா மற்றும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொலர் கையிருப்பு தட்டுப்பாடு காரணமாக இலங்கை அத்தியவசிய உணவு பொருட்கள், மருந்து, எரிபொருள் போன்றவற்றை இறக்குமதி செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதனால், எதிர்வரும் காலங்களில் உணவு, மருந்து உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *