எந்த புதிய திரிபினையும் இந்நாட்டு சுகாதார அமைப்பால் கட்டுப்படுத்த முடியும்

(UTV | கொழும்பு) – உலகளாவிய கொவிட் பேரழிவிற்கு மத்தியில் இலங்கையின் சுகாதார அமைப்பினால் எந்தவொரு புதிய மாறுபாட்ட திரிபையும் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சில தவறான கருத்துக்கள் இருந்தாலும், நாட்டில் உள்ள சுகாதாரத்துறைக்கு எந்தவொரு சூழ்நிலையையும் தாங்கும் ஆற்றல் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சுகாதார அமைச்சில் நேற்று (26) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அமைச்சர் ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

புதிய மாறுபாட்டின் மூலம் உலக புள்ளிவிபரங்கள் சற்றே அதிர்ச்சியளிப்பதாக இருந்தாலும் சர்வதேச ரீதியிலும் இலங்கை சுகாதார சேவை மீது அதிக நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

நாட்டின் சுகாதார அமைப்பு சீர்குலைந்த நிலையில் இருப்பதாக சிலர் தவறான கருத்தை சுமத்தி வருவதாகவும், ஆனால் அவ்வாறானதொரு நிலை ஏற்படாது எனவும் அமைச்சர் தெரிவித்தார். குறிப்பாக நாட்டின் சுகாதார அமைப்பிற்கு அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், பயிற்றுவிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களை நாட்டில் வைத்திருப்பதற்கான தன்னம்பிக்கை உள்ளதாகவும் அவர்களின் பாராட்டத்தக்க அர்ப்பணிப்பும் இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக விசேட வைத்தியர்கள் முதல் அனைவரினதும் உயர் அர்ப்பணிப்பு அனர்த்தத்தைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பலமாக அமைந்தது எனவும் புதிய மாறுபாட்டின் நடத்தை இருந்த போதிலும் தடுப்பூசி மூலம் வைரஸ் பரவுவதையும் இறப்பு எண்ணிக்கையையும் குறைக்க முடிந்தது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *