(UTV | கொழும்பு) – CEYPETCO நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமைக்கு இணங்க டீசல் சலுகையை கோரி போக்குவரத்து அமைச்சிடம் இன்று கோரிக்கை விடுக்கவுள்ளதாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு சலுகை வழங்கப்படாவிடின் விலை திருத்தத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக போக்குவரத்தில் பேருந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது என்றார்.
விஜேரத்ன கூறுகையில், தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடும் பயணிகளின் கோரிக்கை காரணமாக பேரூந்து பயணத்தினை நிறுத்தவில்லை.
எனவே, அதிகரித்து வரும் எரிபொருள் விலையை எதிர்கொள்ளும் வகையில் விலை திருத்தம் அவசியம் என அவர் கருத்து தெரிவித்தார்.
விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் போக்குவரத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.20 முதல் 30 வரை அதிகரிக்கப்படும் என்றும் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஏனைய பேரூந்து கட்டணங்கள் 30 வீதத்தால் அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற விலைவாசி உயர்வைத் தவிர்க்க வேண்டுமானால், போக்குவரத்துத் துறைக்கு டீசல் சலுகையை அரசு வழங்க வேண்டும் என்றார்.