‘அவரவர்களுக்கிடையில் நிலவுகின்ற கலாசார உறவுகளே சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்’

(UTV | கொழும்பு) – அவரவர்களுக்கிடையில் நிலவுகின்ற கலாசார உறவுகளே சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.

ஒரு மாதகால நோன்பை முடித்துக் கொண்டு இஸ்லாமிய மக்கள், அவர்களின் நம்பிக்கையின்படி ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தினத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து ஆன்மீக திருப்தியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நானும் பிரார்த்திக்கின்றேன்.

இஸ்லாமிய மக்களால் மேற்கொள்ளப்படும் பல்வேறு சமய வழிபாடுகளில் நோன்புப் பெருநாள் சிறப்பானதொரு கொண்டாட்டமாகும் . ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வின் மார்க்கப் போதனைகளின்படி நற்செயல்களைப்புரிய இது ஒரு மனத் தூண்டுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இணக்கமான ஒன்றுகூடல்கள், கூட்டு சமரசம், தியாகம், தீமையிலிருந்து மீள்வது, நன்மையைக் கடைப்பிடிப்பது போன்ற அவரவர்களுக்கிடையில் நிலவுகின்ற கலாசார உறவுகளே சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இந்த நல்ல எண்ணங்கள் அனைவருக்கும் மத்தியில் பரவ வேண்டும்.

அனைத்து இறையியலாளர்களின் தத்துவமும் விடுதலையின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. பெருநாள் கொண்டாட்டம் உட்பட இஸ்லாமிய தத்துவத்தில் அந்த மார்க்கத்தின் நம்பிக்கைகளை நாம் நீண்ட காலமாகக் கண்டு வருகிறோம். அது சொல்லும் செய்தியை, சமூக நல்வாழ்வுக்கு பிரயோகிப்பதன் மூலம் பரஸ்பர புரிதலின் வளர்ச்சிக்கு காரணமாக அமைகின்றது. இது மதங்களுக்கு இடையிலான சமூக, கலாசார புரிதலை உறுதிப்படுத்துகிறது.

மதங்கள் போதிக்கும் சமூகக் கோட்பாடுகளை சமூக நலனுக்கான செய்திகளாகப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

இந்த நோன்புப் பெருநாள் பண்டிகைக்குப் பின்னர் வரும் காலம் இலங்கை முஸ்லிம்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியான மற்றும் வளமான காலமாக அமைய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

– ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *