‘பொருளுக்கு தட்டுப்பாடு இல்லை, வருமானப் பிரச்சினை தான் முக்கிய காரணம்’

(UTV | கொழும்பு) – உணவுத் தட்டுப்பாடு வராது என்று விவசாய அமைச்சர் கூறுகிறார், இரு வேலை சாப்பிட வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார். உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என பிரதமர் கூறியுள்ளமை தொடர்பில் விவசாய அமைச்சர் என்ன கூறுகின்றார் என முஜிபுர் ரஹ்மான் மேலும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர,

“.. பிரதமர் சொல்வதை நானும் சொல்கிறேன். உணவு விலை அதிகம். அதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் உணவு இல்லாமல் மக்கள் இறக்க அனுமதிக்க மாட்டோம். எங்கிருந்தாவது கொண்டு வர வேண்டும். பருப்பினை எவ்வளவுக்கு கொண்டு வந்து தருவது? இதன் பொருள் இதுதான். பொருள் தட்டுப்பாடு அதிகம் இல்லை. வருமானப் பிரச்சினை அதனால்தான் மிளகு மரம் வளர்க்கச் சொல்கிறோம்.

நாங்கள் எப்பொழுதும் நாட்டுக்கு உண்மை நிலையை கூறினோம். மக்கள் மோசமான முறையில் அல்ல நல்ல முறையில் முடிவை ஏற்றுக்கொண்டனர்.மக்கள் நெற்பயிர்களில் இறங்கினர்” என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *