(UTV | கொழும்பு) – வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திங்கட்கிழமை முதல் வெள்ளி வரை வாரத்தில் 5 நாட்கள் திணைக்களம் திறந்திருக்கும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தூதரக சேவைகளுக்கான பாரிய தேவை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பிராந்திய தூதரக அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்களும் திறந்திருக்கும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.