(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் வீரர் ப்ரவீன் ஜெயவிக்ரம கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ப்ரவீன் ஜெயவிக்ரம 05 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் ஏனைய துடுப்பாட்ட வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 8ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழக்கவுள்ளார்.