(UTV | கொழும்பு) – காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
எவ்வாறாயினும், போட்டியின் இரண்டாவது நாளில், ரசிகர்கள் குழு ஒன்று காலி மைதானத்தை சுற்றி போராட்டம் நடத்தியது, தற்போதைய நெருக்கடிக்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
இராணுவ வீரர்கள் சிலர் அங்கு வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தி, அதனை நிறுத்துமாறு கூறியதையடுத்து, பின்னர் அங்கு கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
பின்னர், இந்த போராட்டத்தால் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் துடுப்பெடுத்தாடுவதில் சிரமம் ஏற்பட்டதாக இராணுவ தளபதி குறிப்பிட்டார்.
எனினும், அதற்கு பதிலளித்த அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி, இராணுவத் தளபதியின் இந்தக் கருத்து முற்றிலும் பொய்யானது எனவும், போராட்டத்தினால் துடுப்பாட்டத்தில் தாம் எவ்வித சிரமத்தையும் எதிர்கொள்ளவில்லை எனவும் தெரிவித்திருந்தது.
Protesters were forcibly removed from the fort ramparts late on the second day, and the area was then completely devoid of any members of the public on the final day of a Test match Aust won inside 154 overs, with guards posted inside the fort #SLvAUS https://t.co/79hZvPG2d3
— Daniel Brettig 🏏 (@danbrettig) July 3, 2022