ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று

(UTV | கொழும்பு) –   09வது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு இன்று (03) காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

காலை 10.30 மணிக்கு பேரவை திறக்கப்படும் என நாடாளுமன்ற தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 33 ஆவது பிரிவின் கீழ் பெறப்பட்ட அதிகாரங்களின் பிரகாரம், ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பார்.

அழைக்கப்பட்ட அதிதிகளின் வருகை காலை 09.30 மணியளவில் இடம்பெற்று அதன் பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை வந்தடைவார்கள்.

எவ்வாறாயினும், ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், எளிமையான வைபவம் நடத்தப்படும் என்றும், மரியாதை செலுத்துதல் மற்றும் வாகன பேரணிகள் எதுவும் இடம்பெறாது என்றும் நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியை வரவேற்க மாத்திரம் முப்படைகள் ஏந்திய இராணுவ வணக்கம் செலுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தேசியக் கொடியை மாத்திரம் ஏற்றி வைப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *