(UTV | கொழும்பு) – உலகின் புரட்சிகரமான தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களான ஃபைசர் மற்றும் மாடர்னா இடையே நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கொவிட் தடுப்பூசியை உருவாக்குவது தொடர்பான தகராறில் ஃபைசருக்கு எதிராக மாடர்னா வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கொவிட் தடுப்பூசியை உருவாக்கும் போது ஃபைசர் காப்புரிமையை மீறியதாக மாடர்னா குற்றம் சாட்டியுள்ளது.
Pfizer தடுப்பூசியை உருவாக்க காரணமாக இருந்த ஜேர்மனியின் Bio N Tech நிறுவனத்திற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கொவிட் தொற்றுநோய்க்கு முன்னர் மேம்படுத்தப்பட்ட எம்ஆர்என்ஏ தொழில்நுட்பத்தை ஃபைசர் நகலெடுத்ததாக மாடர்னா தனது புகாரில் மேலும் குற்றம் சாட்டியுள்ளது.