ஈராக்கில் பதற்றம் : மோதலில் 20 பேர் பலி

(UTV |  பாக்தாத்) – ஈராக் அரசியலில் ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் அமெரிக்க-எதிர்ப்பு போராளிகளை வழிநடத்தியவர் மற்றும் லட்சக்கணக்கான ஆதரவாளர்களைக் கொண்ட செல்வாக்குமிக்க தலைவராக திகழ்கிறார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி 73 இடங்களை வென்ற நிலையில், யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் இழுபறி நீடிக்கிறது. ஈரான் ஆதரவு ஒருங்கிணைப்புடன் ஈராக்கில் பிரதமர் வேட்பாளர்களுடன் அரசாங்கத்தை அமைக்க அல் சதர் எதிர்ப்பு தெரிவித்தார்.

அல்-சதர் மற்றும் அவரது போட்டியாளர்களுக்கு இடையிலான முட்டுக்கட்டையால் தேர்தல் முடிந்து பல மாதங்கள் கடந்தும்கூட, ஈராக்கில் ஒரு சாதனையாக இன்னும் அரசாங்கம் இல்லாத நிலை உள்ளது.

பாராளுமன்றத்தை கலைத்தல், முன்கூட்டியே தேர்தல் நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களை அல்-சதர் வலியுறுத்தினார். இதற்கிடையே, முக்தாதா அல்-சதர், தான் அரசியலில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அல்-சதர் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 20 பேர் பலியாகினர் என தகவல் வெளியாகியுள்ளது. போராட்டக்காரர்களின் வன்முறை மற்றும் ஆயுத பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும் எனக்கூறி அல் சதர் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகிறார். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத சூழலில் அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *