(UTV | கொழும்பு) – அரச பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக மட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கான சுற்றறிக்கை இன்று (14) வெளியிடப்படவுள்ளது.
அதற்கமைய, அரச ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக மட்டுப்படுத்தப்படும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்ன தெரிவித்தார்.
இருப்பினும், சில அத்தியாவசிய சேவைகளை இந்த தீர்மானம் பாதிக்காது.
இதேவேளை, தமது சேவை தொடர்பான ஓய்வுபெறும் வயதை 60 ஆக மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவதாக அரச நிறுவனங்களின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறாயின், நீர்ப்பாசனத் திணைக்களம், தொடருந்து திணைக்களம் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் செயலிழப்பு ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர்.