பல அமைச்சுக்களின் விடயதானங்களை திருத்திய வர்த்தமானி வெளியீடு

(UTV | கொழும்பு) – பல அமைச்சுக்களின் விடயதானங்களை திருத்தியமைத்து விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய திருத்தங்களுடன் கூடிய வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும், நாணய பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் உள்ள நிறுவனப் பதிவுத் துறையும் அந்த அமைச்சுக்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

விவசாய அமைச்சின் கீழ் உள்ள சிலோன் போஸ்பேட் கம்பனி மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் ரோபோட்டிக்ஸ் சிறப்பு மையம் ஆகியவையும் அந்த அமைச்சகங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இதன்படி, கம்பனி பதிவாளர் திணைக்களம் மற்றும் சிலோன் பாஸ்பேட் கம்பனி லிமிடெட் ஆகியன கைத்தொழில் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

மேலும், இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் மற்றும் ரோபோட்டிக்ஸ் சிறப்பு மையம் ஆகியவை தொழில்நுட்ப அமைச்சின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *