Breaking News: “விமலை கைது செய்ய உத்தரவு”

(UTV | கொழும்பு) –   முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதன் காரணமாக அவரைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) பிடியாணை பிறப்பித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயித் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது, ​​கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களின் இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு செப்டம்பர் 11ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *