சபாநாயகர் சர்வதிகார போக்கு? நடவடிக்கைக்கு தயாராகும் எதிர்க்கட்சி!!

(UTV | கொழும்பு) –

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் நடத்தை கோலம் தொடர்பில் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாக பிரதான எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

சபாநாயகரின் செயற்பாட்டினால் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் நடத்தை தொடர்பில் ஏனைய பங்காளி கட்சிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் எதிர்க் கட்சி தலைவவர் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான விவாதம் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய முன்னெடுக்கப்படவில்லை என்றும் சபாநாயகர் அவரின் கடமைகளை மீறி பக்கச்சார்பாக செயற்படுவதாகவும் அவர் குற்றச்சாட்டு முன்வைத்தாா்.

பாராளுமன்ற விவாதத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டாா்.

அவர் தொடரந்து,

மிகவும் தவறான முறையிலும், கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறியே செயற்பட்டுள்ளாார்கள். தெளிவாக சபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்படுகிறாா்.

ஆளுந்தரப்பினரின் ஆலோசனைக்கமைய விவாதாத்தை குறுகிய காலத்தில் நிறைவுசெய்யவும் நடவடிக்கை எடுத்திருந்தாா். ஞாயிற்றுக்கிழமை விவாதத்தை நடத்தால், அதே காலப்பகுதியை எடுத்து சனிக்கிழமை முழுமையான விவாதத்தை நடத்தவே கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், சபாநாயகர் அந்த தீர்மானற்களை முழுமையாக மீறி சர்வாதிகார போக்கில் செயற்பட்டமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். சபாநாயக்கருக்குரிய கடமையை முழுமையாக மீறி தமக்கு ஏற்றவாறு தனிப்பட்ட நோக்கங்களுக்காக செயற்படுவது கவலைக்குரிய விடயமாகும்.

சபாநாயகரின் நடத்தை கோலம் குறித்து ஏனைய எதிர்தரப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு நிச்சயமாக தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினாா்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *