MMDA சட்டமூலம் தொடர்பில்: முஸ்லிம் எம்பிகள் கையளித்தவை என்ன ? முழு அறிக்கை இதோ

(UTV | கொழும்பு) –

முஸ்லிம் விவாக, விவா­­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பி­லான தங்­­ளதுஇறுதித் தீர்­மானம் அடங்­கிய அறிக்­கையை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கடந்த வியா­ழக்­கி­ழமை நீதி­­மைச்சர் விஜ­­தாச ராஜ­­க்ஷ­விடம் பாரா­ளு­மன்­றத்தில் கைய­ளித்தனர் . அதன் முழு அறிக்கை

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தச்சட்டம் தொடர்பான விரிவானஅறிக்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது

8 ஜூன் 2023

கௌரவ Dr. விஜேதாஸ  ராஜபக்ஷ  PC. MP.

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்,

நீதியமைச்சு,

கொழும்பு 10

கனம் ஐயா,

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, முஸ்லிம் விவாக விவாகரத்துச்சட்டத்திற்கு முன்பட்டுள்ள திருத்தச்சட்டம் தொடர்பான விரிவான அறிக்கை

இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தங்களுடைய விவாக விவாகரத்து தொடர்பான நடைமுறைகளைதாங்கள் பின்பற்றுகின்ற மார்க்க வழிகாட்டல்களுக்கு அமைவாகச் செய்துகொள்வதை இலகுவாக்குகின்ற ஒருசட்டமே முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமாகும். முஸ்லிம்களுக்கான இந்த உரிமையானது இலங்கையின்அரசியல் அமைப்பினால் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது.

ஆகவே இந்தச் சட்டத்திற்கு செய்யப்படுகின்ற திருத்தங்கள் இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களான அல்குர்ஆன், அல்ஹதீஸ், இஜ்மா, கியாஸ் என்பவற்றிற்கு அமைவானதாக இருப்பதை உத்தரவாதம் செய்தல் அவசியம். மட்டுமல்லாது முன்மொழியப்படுகின்ற திருத்தங்களாவன தற்போதைய சட்டத்தில் காணப்படுகின்றகுறைபாடுகளை நிவர்த்தி செய்வதோடு தற்போது முஸ்லிம்கள் இந்த நாட்டின் சம பிரஜைகளாக அனுபவித்துவருகின்ற வரப்பிரசாதங்களை மீள் வலியுறுத்துவதாகவும் அவர்களுடைய அடையாளங்களைப்பாதிக்காததாகவும், முஸ்லிம் சமூகத்தின் அமைதியான இருப்புக்குக் குந்தகம் விளைவிக்காததாகவும் இருத்தல்அவசியம்.

தற்போதுள்ள முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும்விதத்தில், இந்தச் சட்டமானது திருத்தப்பட வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கையை நாங்கள்ஏற்றுக்கொள்கின்றோம்.

ஆனால், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலமானது அதன் உள்ளடக்கங்களில் மார்க்கத்திற்குமுரணான விடயங்களைக் கொண்டிருப்பதையும் அதேபோல, எங்களுடைய சமூகத்தைப் புதிய பிரச்சினைகளில்தள்ளிவிடக் கூடியதான அம்சங்களை உள்ளடக்கி இருப்பதையும் நாங்கள் அவதானிக்கின்றோம்.

இந்தத் திருத்தச் சட்டமூலத்தைக் கூர்ந்து ஆராய்கின்ற போது அதிலே காணப்படுகின்ற சில பரிந்துரைகள்குறிப்பாக; திருமண வயது, வலி தொடர்பான சட்டங்கள், பலதார மணம்,

காதி நீதிமன்ற முறைமையில் செய்யப்படுகின்ற மாற்றங்கள், காதிகள் நியமனம், திருமணப் பதிவாளர்களின்நியமனம், திருமணப் பதிவு போன்ற முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திற்கு முன்மொழியப்பட்டுள்ளதிருத்தச்சட்டம் தொடர்பான விரிவான அறிக்கை

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது

பொருளடக்கம்:

பொருளடக்கம்

Cover letter………………………………………………………………………………………………………. 3

1.   அறிமுகம்………………….…………………………………………………………………………….. 5

2.   சட்டத்தின் அடிப்படை………………….……………………………………………………….. 6

3.   குறிக்கோள்………………..…………………………………………………………………………… 7

4.   ஆய்வு…………………….………………………………………………………………………………….. 7

4.1 பிரதான சட்டத்தின் தலைப்பு (MMDA – பாகம் 115)……………………..………………. 7

4.2 ‘Nikah ceremony’ என்ற வார்த்தைப் பிரயோகம்………………….…………………………. 8

4.3 வலியின் சம்மதம்…………………..……………………………………………………………………… 8

4.4 திருமணப்  பதிவு………………………………………………………………………………………………. 9

4.5 திருமணப் பதிவாளர்களை நியமித்தல்………………..……………………………………. 9

4.6 காதிகளை நியமித்தல்………………..………………………………………………………………………. 10

4.7 திருமண வயது……………………..…………………………………………………………………………. 10

4.8 காதி நீதிமன்றம்………………..……………………………………………………………………………… 12

4.9 காதிகள் சபை (Board of Quazis)…………………..……………………………………………………… 14

4.10 பலதாரமணம்…………………………………………………………………………………………………. 15

4.11 விவாகரத்து………………..……………………………………………………………………………………. 15

4.12 “மத்தா”…………………..…………………………………………………………………………………………. 16

4.13 சட்டத்தரணிகள் மூலம் பிரசன்னமாகுதல்…………….…………………………………. 16

4.14 முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து ஆலோசனை சபை (MMDAB)…… 17

5.    பரிந்துரைகள்……………..………………………………………………………………………………………. 17

Cover letter……………………………………………………………………

     Cover letter

8 ஜூன் 2023

கௌரவ Dr. விஜேதாஸ  ராஜபக்ஷ  PC. MP.

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்,

நீதியமைச்சு,

கொழும்பு 10

கனம் ஐயா,

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, முஸ்லிம் விவாக விவாகரத்துச்சட்டத்திற்கு முன்பட்டுள்ள திருத்தச்சட்டம் தொடர்பான விரிவான அறிக்கை

இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தங்களுடைய விவாக விவாகரத்து தொடர்பான நடைமுறைகளைதாங்கள் பின்பற்றுகின்ற மார்க்க வழிகாட்டல்களுக்கு அமைவாகச் செய்துகொள்வதை இலகுவாக்குகின்ற ஒருசட்டமே முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமாகும். முஸ்லிம்களுக்கான இந்த உரிமையானது இலங்கையின்அரசியல் அமைப்பினால் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே இந்தச் சட்டத்திற்கு செய்யப்படுகின்றதிருத்தங்கள் இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களான அல்குர்ஆன், அல்ஹதீஸ், இஜ்மா, கியாஸ் என்பவற்றிற்குஅமைவானதாக இருப்பதை உத்தரவாதம் செய்தல் அவசியம். மட்டுமல்லாது முன்மொழியப்படுகின்றதிருத்தங்களாவன தற்போதைய சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வதோடு தற்போதுமுஸ்லிம்கள் இந்த நாட்டின் சம பிரஜைகளாக அனுபவித்து வருகின்ற வரப்பிரசாதங்களை மீள்வலியுறுத்துவதாகவும் அவர்களுடைய அடையாளங்களைப் பாதிக்காததாகவும், முஸ்லிம் சமூகத்தின்அமைதியான இருப்புக்குக் குந்தகம் விளைவிக்காததாகவும் இருத்தல் அவசியம்.

தற்போதுள்ள முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும்விதத்தில், இந்தச் சட்டமானது திருத்தப்பட வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கையை நாங்கள்ஏற்றுக்கொள்கின்றோம்.

ஆனால், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலமானது அதன் உள்ளடக்கங்களில் மார்க்கத்திற்குமுரணான விடயங்களைக் கொண்டிருப்பதையும் அதேபோல, எங்களுடைய சமூகத்தைப் புதிய பிரச்சினைகளில்தள்ளிவிடக் கூடியதான அம்சங்களை உள்ளடக்கி இருப்பதையும் நாங்கள் அவதானிக்கின்றோம். இந்தத்திருத்தச் சட்டமூலத்தைக் கூர்ந்து ஆராய்கின்ற போது அதிலே காணப்படுகின்ற சில பரிந்துரைகள் குறிப்பாக; திருமண வயது, வலி தொடர்பான சட்டங்கள், பலதார மணம்,

காதி நீதிமன்ற முறைமையில் செய்யப்படுகின்ற மாற்றங்கள், காதிகள் நியமனம், திருமணப் பதிவாளர்களின்நியமனம், திருமணப் பதிவு போன்ற  இன்னும் பல விடயங்கள் மார்க்க வழிகாட்டலோடு முரண்படுவதாகவும்மேலும் எமது சமூகத்தை எதிர்மறையாகப் பாதிக்கின்ற மூலக்கூறுகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

கீழே இணைக்கப்பட்டுள்ள விரிவான அறிக்கையானது முன்மொழியப்பட்டுள்ள திருத்தச் சட்டத்தினை விரிவாகஆராய்ந்து அதனுடைய சாதக பாதகங்களை விவரிப்பதாக அமைகின்றது.

இந்த அறிக்கையிலே முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகளைக் கருத்திற்கொண்டு முஸ்லிம் விவாகவிவாகரத்துச் சட்டமானது திருத்தப்பட வேண்டும் என முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய நாங்கள்மேன்மை தாங்கிய நீதி அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கின்றோம்.

அத்தோடு எங்களுடைய இந்த அறிக்கையானது, இறுதியானதும் முடிவானதும் ஆகும் என்பதையும் இங்குஅழுத்திச் சொல்ல ஆசைப்படுகின்றோம்.

இவ்வண்ணம்,

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்

1. அறிமுகம்:

இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தங்களுடைய விவாக விவாகரத்து தொடர்பான நடைமுறைகளைத்தாங்கள் பின்பற்றுகின்ற மார்க்க வழிகாட்டல்களுக்கு அமைவாகச் செய்து கொள்வதை வசதி செய்கின்ற ஒருசட்டமே முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமாகும் (இதன்பின்னர்பிரதான சட்டம்எனக் குறிப்பிடப்படும்). முஸ்லிம்களுக்கான இந்த உரிமையானது இலங்கையின் அரசியல் அமைப்பினால்பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, இந்தச் சட்டத்திற்குச் செய்யப்படுகின்ற திருத்தங்கள் இஸ்லாமிய சட்டமூலாதாரங்களான அல்குர்ஆன், அல்ஹதீஸ், இஜ்மா, கியாஸ் என்பவற்றிற்கு அமைவானதாக இருப்பதைஉத்தரவாதம் செய்தல் அவசியம். மட்டுமல்லாது முன்மொழியப்படுகின்ற திருத்தங்களாவன தற்போதையசட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வதோடு தற்போது முஸ்லிம்கள் இந்த நாட்டின் சமபிரஜைகளாக அனுபவித்து வருகின்ற வரப்பிரசாதங்களை மீள் வலியுறுத்துவதாகவும் அவர்களுடையஅடையாளங்களைப் பாதிக்காததாகவும், முஸ்லிம் சமூகத்தின் அமைதியான இருப்புக்குக் குந்தகம்விளைவிக்காததாகவும் இருத்தல் அவசியம்.

மேலும் ஒழுக்கமிக்க ஆரோக்கியமான ஒரு இஸ்லாமிய சமூகமானது உறுதியானதும் பாதுகாப்பானதுமானகுடும்பக் கட்டமைப்பின் மீது கட்டமைக்கப்படுகின்றது. இஸ்லாமியக் குடும்பக் கட்டமைப்பிலே அதன்ஒவ்வொரு அங்கத்தவர்களுக்குமான பொறுப்புகளும் கடமைகளும் காணப்படுகின்றன.அவற்றின் மூலம்தான்பெண்களினதும் பிள்ளைகளினதும் பாதுகாப்பும் ஆரோக்கிய வாழ்வும் உத்தரவாதப்படுத்தப்படுகின்றது. இஸ்லாம் இவ்வாறான குடும்பக் கட்டமைப்பின் முக்கியத்துவத்தினை வலியுறுத்துவதோடு அவ்வாறான குடும்பக்கட்டமைப்பை உருவாக்கிப் பாதுகாப்பதற்கான வசதியினைத் தன்னுடைய வழிகாட்டல்களின் மூலம் செய்துதருகின்றது. முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திற்குச் செய்யப்படுகின்ற எந்தத் திருத்தமாவது இந்தக்குடும்பக் கட்டமைப்பைச் சீர்குலைக்கின்ற அல்லது பாதிக்கின்ற தன்மையுடையதாக இருக்குமானால் அதைஅனுமதிக்க முடியாது.

தற்போதுள்ள முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும்விதத்தில், இந்தச் சட்டமானது திருத்தப்பட வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கையை நாங்கள்ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலமானது அதன்உள்ளடக்கங்களில் மார்க்கத்திற்கு முரணான விடயங்களைக் கொண்டிருப்பதையும் அதேபோல, எங்களுடையசமூகத்தைப் புதிய பிரச்சினைகளில் தள்ளிவிடக் கூடியதான அம்சங்களை உள்ளடக்கி இருப்பதையும் நாங்கள்அவதானிக்கின்றோம். இந்தத் திருத்தச் சட்டமூலத்தைக் கூர்ந்து ஆராய்கின்ற போது அதிலே காணப்படுகின்றசில பரிந்துரைகள் குறிப்பாக; திருமண வயது, வலி தொடர்பான சட்டங்கள், பலதார மணம்,

காதி நீதிமன்ற முறைமையில் செய்யப்படுகின்ற மாற்றங்கள், காதிகள் நியமனம், திருமணப் பதிவாளர்களின்நியமனம், திருமண பதிவு போன்ற இன்னும் பல விடயங்கள் மார்க்க வழிகாட்டலோடு முரண்படுவதாகவும்மேலும் எமது சமூகத்தை எதிர்மறையாகப் பாதிக்கின்ற மூலக்கூறுகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

2. சட்டத்தின் அடிப்படை

முன்மொழியப்பட்டுள்ள திருத்தச் சட்டத்தில் சட்டத்தின் அடிப்படை தொடர்பான தெளிவின்மைகாணப்படுகின்றமை உசிதமானதல்ல என நாங்கள் கருதுகின்றோம்.

நம் நாட்டில் பின்பற்றப்படும் பௌத்தம், ‘தேரவாதபிரிவை அடிப்படையாகக்கொண்டது. பௌத்தம்தொடர்பான ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், ‘மகாயானபிரிவு பரிசீலிக்கப்படுவதில்லை, மாறாக இந்தநாட்டின் பெரும்பான்மையான பௌத்தர்கள் பின்பற்றும் பிரிவான, ‘தேரவாதத்தைப்பற்றிய பிரிவுகளேகருத்தில்கொள்ளப்படுகின்றன.

இதேபோல், 1200 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்நாட்டு முஸ்லிம்களின் தீர்ப்புகள் மற்றும் கல்வி உள்ளிட்டஅனைத்து அம்சங்களும் ஷாஃபி சிந்தனைப் பிரிவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஷாஃபி சிந்தனைப் பிரிவானது இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்புகளைப் பெறுவதற்கு அடிப்படையாகப்பயன்படுத்தப்படுவதால், அதன் போதனைகள் மார்க்க ரீதியான வழிகாட்டல்கள் வரலாறு நெடுகிலும், இலங்கைமுஸ்லிம்களால் கற்றும், கற்பிக்கப்பட்டும், நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இலங்கையின் அரபு மதரஸாக்கள் மற்றும் குர்ஆன் மதரஸாக்களில் ஷாபி சிந்தனைப் பிரிவின்அடிப்படையிலேயே பெரும்பான்மையான கல்விப் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

1700 களின் முற்பகுதியில், சில முஸ்லிம்கள் இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளிலிருந்து நாடுகடத்தப்பட்டனர். அவர்கள் தமது நாடான இந்தோனேசியாவின் நடைமுறைக்கு நிகரான ஷாஃபி சிந்தனைப்பிரிவை பின்பற்றியதால், இலங்கையின் உள்ளூர் முஸ்லிம்களுடன் இணைந்து அவர்களால் சகலவிவகாரங்களிலும் வசதியாக ஈடுபடக் கூடியதாய் இருந்தது.

ஜாவா முஸ்லீம்கள் குர்ஆன் மதரஸாக்களை நடத்தினார்கள், அதில் அவர்கள் மாணவர்களுக்கு புனித குர்ஆன்மற்றும் அடிப்படை இஸ்லாமிய மத போதனைகளை கற்றுக் கொடுத்தனர். இரு நாட்டு முஸ்லீம்களும் ஒரேஷாஃபி சிந்தனைப் பிரிவை பின்பற்றியதால், மாணவர்கள் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஆசிரியர்களிடமிருந்து தங்கள் அறிவைப் பெற்றுக்கொள்வது எளிதாக இருந்தது.2.நோக்கம்

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திற்கு திருத்தச்சட்டத்தினை நுணுக்கமாக ஆராய்வதன் மூலம், முஸ்லிம்விவாக  விவாகரத்துச் சட்டத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தச்சட்டம் தொடர்பில் சரியான, அறிவுசார்புரிதலை உருவாக்குதல் / கட்டியெழுப்புதல்

3. குறிக்கோள்

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தச்சட்டத்தினை நுணுக்கமாகஆராய்தல்.

முன்மொழியப்பட்டுள்ள திருத்தச்சட்டத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகளை இனங்காணலும்உறுதிப்படுத்தலும்.

முன்மொழியப்பட்டுள்ள திருத்தச்சட்டம் ஏற்படுத்தக் கூடிய எதிர்மறையான விளைவுகளை ஆராய்தல்.

சட்டத் திருத்தம் செய்கின்றபோது ஒரு காத்திரமான பொறிமுறையை கட்டமைத்துக்கொள்ள வேண்டியதன்அவசியத்தை வலியுறுத்துதல்.

4. ஆய்வு

திருமண வயது, வலி தொடர்பான சட்டங்கள், பலதார மணம், காதி நீதிமன்ற முறைமையில் செய்யப்படுகின்றமாற்றங்கள், காதிகள் நியமனம், திருமணப் பதிவாளர்களின் நியமனம், திருமண பதிவு போன்ற இன்னும் பலவிடயங்களில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களில் காணப்படுகின்ற குறைபாடுகள் பற்றி இப்பகுதியில்ஆராயப்படுகின்றது.4.1 பிரதான சட்டத்தின் தலைப்பு (MMDA – பாகம் 115)

முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்தத்தில், பிரதான சட்டத்தின் தலைப்பிலிருந்து ‘Muslim’ என்ற சொல்நீக்கப்பட்டு ‘persons professing Islam’ என்ற சொற்பிரயோகம் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு நபர்இஸ்லாத்தைப் பின்பற்றுபவரா என்பதைத் தீர்மானிப்பதற்கு அவருடைய வாக்குமூலத்தைத் தவிர வேறு எந்தமுறைமையும் கிடையாது. இது குறித்த சட்டமானது துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு வழிவகுக்கும் என்பதோடுசமூகத்தில் புதிய பிரச்சினைகளையும் தோற்றுவிக்கும். ஆகவே, பிரதான சட்டத்தின் தலைப்பானதுமாற்றப்படக் கூடாது. மேலும் இந்தத் தலைப்புடன் தொடர்புடைய ஏனைய பிரிவுகளும் எந்தமாற்றங்களுமன்றித் அவ்வாறே இருத்தல் வேண்டும்.

4.2 ‘Nikah ceremony’ என்ற வார்த்தைப் பிரயோகம்

முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்தத்தில், பிரதான சட்டத்தில் பிரயோகிக்கப்பட்டுள்ள ‘Nikah ceremony’ என்ற சொற்பிரயோகமானது ‘Solemnization’ என்ற சொற்பிரயோகத்தினால் மீளமைக்கப்பட்டுள்ளது.

‘Nikah’ என்பது சர்வதேச ரீதியாக புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட, முஸ்லிம்களின் விவாக முறைமையில்சடங்கு ரீதியான நிகழ்வினைக் குறிக்கின்ற ஒரு தனித்துவமான சொற்பிரயோகமாகும். இலங்கையில் வாழ்கின்றமுஸ்லிம்களை மாத்திரம் ஆள்கின்ற முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திலிருந்து ‘Nikah’ என்றவார்த்தையினை நீக்குவதற்கான எந்த நியாயமான காரணங்களையும் நாங்கள் காணவில்லை. பிரதானசட்டத்தில் காணப்படுகின்ற “Nikah ceremony” என்ற சொற்பிரயோகம் அவ்வாறே தொடர்ந்தும்இருக்கவேண்டும் என நாங்கள் உறுதியாகப் பரிந்துரை செய்கின்றோம்.

4.3 வலியின் சம்மதம்

இஸ்லாமிய திருமணமொன்றில் மணமகளினுடைய சம்மதத்தைப் பெறுவதென்பது கட்டாயமாகும். ஆகவே, மணமகளின் கையொப்பத்தைப் பெறுவதை எதிர்ப்பதற்கான எந்த அடிப்படையும் இல்லை. ஆனால், முன்னொழியப்பட்டுள்ள சட்ட திருத்தத்தில் மணமகளினுடைய கையொப்பத்தைத் திருமணப் பதிவுஆவணத்தில் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்தோடு மணமகள் கையொப்பமிடுகின்றகாரணத்தினால் மணமகளினுடைய வலியினுடைய கையொப்பமானது கட்டாயமானதல்ல என்று ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இங்கு குறித்து காட்டப்பட வேண்டியது யாதெனில்இஸ்லாமியத் திருமணம் ஒன்றில்ஒப்பந்ததாரர்கள் மணமகனும் மணமகளின் வலியுமேஎன்பதாகும்.

முன்மொழியப்பட்டுள்ள திருத்தச் சட்டமானது வலியினுடைய வகிபாகம் தொடர்பான பிரிவுகளான பிரிவு 16, 17, 19, 18, 21 மற்றும் முதலாவது அட்டவணையின் படிவம் III ஆகியவற்றைத் திருத்தம் செய்வதன் மூலம்மணமகளை ஒப்பந்ததாரராகவும் மணமகளினுடைய வலியை ஒரு விருப்பத்தேர்வாகவும் (‘ஏதாவது இருப்பின்’, ‘மணமகளால் பரிந்துரைக்கப்பட்டிருப்பின்’) ஆக்கியிருக்கின்றது.

மணமகள் தன்னுடைய சம்மதத்தை வெளிப்படையாகத் தெரிவிப்பதற்காக திருமணப் பதிவு ஆவணத்தில்கையொப்பமிட வேண்டும். ஆனால், இந்த ஏற்பாடானது திருமண ஒப்பந்தத்தின் கட்டாயமான தேவைபாடான, திருமண ஒப்பந்ததாரர்களில் ஒருவரான வலியினுடைய கையொப்பம் என்ற தேவைபாட்டினை இல்லாமலாக்கமாட்டாது.

பிரதான சட்டத்தில் மணமகளினுடைய வலியின் வகிபாகம் தொடர்பாக வரையறை செய்கின்ற பிரிவுகளோஅல்லது அட்டவணைகளோ இல்லாமலாக்கப்படவோ திருத்தப்படவோ கூடாது. மேலும் முன்னொழியப்பட்டுள்ளசட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ள புதிய பிரிவான பிரிவு 18 (1 A) உள்வாங்கப்படக் கூடாது.

4.4 திருமணப் பதிவு

திருமணத்தை பதிவு செய்வதானது கட்டாயமானது. ஆனால், வழக்காற்றுத் திருமணங்களையும் திருமணமாகஇனங்காண்பதை சட்டம் வசதி செய்ய வேண்டும். இஸ்லாத்தில் வழக்காற்றுத் திருமணங்கள் வலிதானவை. முன்மொழியப்பட்டுள்ள திருத்தச்சட்டத்தில் திருமணத்தை பதியத் தவறுவதானது அந்தத் திருமணத்தைவலிதற்ற திருமணமாக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு நாம் அனைவரும் அவதானிக்க வேண்டியதுயாதெனில் வழக்காற்றுத் திருமணம் ஒன்று சட்டத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாத போது, அவ்வாறானதிருமணத்தில் ஈடுபட்ட பெண்கள் அத்திருமணம் தொடர்பில் சொத்துரிமை உள்ளடங்கலாக எந்தவிதஉரிமைகளையும் தனது கணவனிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியாமல் போகும். அத்தோடு குறித்ததிருமணத்தில் பிறந்த பிள்ளைகளும் எந்தவித சட்ட ரீதியான அந்தஸ்தையும் தன்னுடைய தந்தையின்சொத்துக்களின் வாரிசுகளாக பெற்றுக்கொள்ள முடியாது. சாராம்சமாக, வழக்காற்றுத் திருமணங்களைச்சட்டம் அங்கீகரிக்க மறுக்கின்ற போது அது பெண்களையும் சிறுவர்களையும் இடருக்குள் தள்ளிவிடும்.

திருமணப் பதிவானது கட்டாயமாக்கப்பட வேண்டும். பதியப்படவில்லை என்ற காரணத்திற்காக இஸ்லாமியத்திருமணம் ஒன்று வலிதற்றதாகாது. ஆனால், திருமணப் பதிவானதுநிக்காஹ்நடக்கின்ற அதே தினத்திலேயேகட்டாயமாகப் பதிவுசெய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் அது தண்டனைக்குரியகுற்றமாகக் கருதப்பட வேண்டும். (இது திருமணப் பதிவினை ஊக்குவிக்க உதவும்)

4.5 திருமணப் பதிவாளர்களை நியமித்தல்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரத்தியேகமான ஏற்பாட்டினைச் செய்யும் நெறிமுறையை இஸ்லாம்வழிகாட்டுகின்றது. இந்த வழிகாட்டலானது திருமண ஒன்று கூடல்களின் போதும் முஸ்லிம் சமூகத்தினால்கடைப்பிடிக்கப்படுகின்றது. எனவே, திருமணப் பதிவானது பெருந்திரளான ஆண்கள் கூடியிருக்கின்ற சபையில்நிறைவேற்றப்படுவதும், ஏனைய சமய ரீதியான சடங்குகள் பெண்கள் கூடி இருக்கின்ற பகுதியில், ஒரு சிலஅனுமதிக்கப்பட்ட ஆண்களின் பங்குபற்றுதலோடு மாத்திரம் நடைபெறுவதும் இஸ்லாமியத் திருமணத்தின்வழக்கமாகும். எனவே, இலங்கை முஸ்லிம்கள் தசாப்தங்களாகப் பின்பற்றி வருகின்ற திருமணப்பாரம்பரியத்தில் பெருந்திரளான ஆண்கள் பங்குபற்றுகின்ற திருமணப் பதிவு நிகழ்வில் பெண் பதிவாளர்களைநியமித்தலானது சாத்தியம் அற்றது. அத்தோடு திருமணப் பதிவு நிகழ்வுகள் அநேகமாகப் பள்ளிவாயல்களில்இடம்பெறுவதும் எமது பாரம்பரியக் கலாச்சாரமாகும். பெண்கள் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில்பள்ளிவாசல்களுக்குச் செல்ல முடியாது. ஆகவே பெண்களைத் திருமணப் பதிவாளர்களாக நியமிப்பதானதுசமூகத்தில் சில நடைமுறை ரீதியான அசௌகரியங்களை ஏற்படுத்தும்.

எனவே, பிரதான சட்டத்தில் திருமணப் பதிவாளர்கள், தற்காலிகப் பதிவாளர்கள் மற்றும் விஷேட பதிவாளர்கள்போன்றவர்களின் நியமனம், பொறுப்புகள், கடமைகள் ஆகியவற்றை வரையறை செய்கின்ற பிரிவுகளான பிரிவு8, 9, 10 ஆகிய பிரிவுகளிலும் மற்றும் அட்டவணைகளிலும் ஆண் என்ற வார்த்தையையும் ஆணைக் குறிக்கின்றஏனைய சொற்பிரயோகங்களையும் நீக்குவதை அனுமதிக்க முடியாது.4.6 காதிகளை நியமித்தல்

காதியாக செயற்படுகின்ற பொறுப்பும் கடமையும் ஆண்களுக்குரியது என மார்க்க வழிகாட்டலின்அடிப்படையில் மார்க்க அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆகவே, நீதிச்சேவை ஆணைக்குழுவானதுகாதியாக நியமிப்பதற்கு விண்ணப்பிப்பவர்களின் பிராந்தியத்தில் அவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதன்மூலம் அவருடைய கல்வித்தகைமைகள், நன்னடத்தை மேலும் ஆற்றல் போன்றவற்றைப் பரிசீலித்துபொருத்தமான ஒரு நபரைக் காதியாக நியமிக்க வேண்டும் என நாங்கள் பரிந்துரை செய்கின்றோம்.

4.7 திருமண வயது

கடைசியாக வெளியிடப்பட்ட 2012 ஆம் ஆண்டின் குடிசன மதிப்பு அறிக்கையில் 15 வயதிற்கு குறைவானதிருமணங்கள் 3204 இடம் பெற்றுள்ளன. அவற்றில் 471 திருமணங்கள் முஸ்லிம் சமூகத்தில்இடம்பெற்றுள்ளன. அதேபோன்று 15 வயதிற்கும் 19 வயதுக்கும் இடையான திருமணங்கள் 87,633 இடம்பெற்றுள்ளன அதில் அண்ணளவாக 12000 திருமணங்கள் முஸ்லிம் சமூகத்தில் நடைபெற்றுள்ளன. இங்கு நாம்கவனிக்க வேண்டியது யாதெனில், பொதுச்சட்டத்திற்குத் திருமணத்திற்கான ஆகக் குறைந்த வயதெல்லை 18 என்று நிர்ணயிக்கப்பட்ட பின்னரே முஸ்லிம் சமூகம் தவிர்ந்த ஏனைய சமூகத்தில் இப்பெருமளவான இளவயதுத்திருமணங்கள் பதிவாகியுள்ளன. இந்தப் புள்ளிவிபரமானது திருமணத்திற்கான ஆகக் குறைந்தவயதெல்லையை 18 எனச் சட்டத்தினால் வரையறுப்பதன் மூலம் இளவயதுத் திருமணங்களைத் தடுக்க முடியாதுஎன்பதை விஞ்ஞான பூர்வமாக நிறுவுகின்றது. மேலும், யதார்த்தத்தில் 18 வயதுக்கு முன்னரான திருமணங்களின்அவசியம் இருப்பதையும் இந்தப் புள்ளிவிபரம் எமக்குப் பறைசாற்றுகின்றது.

இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவைக்கு 1995 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 22 ஆம் இலக்கத்திருத்தச் சட்டத்தின் மூலம் பெண் ஒருவர் பாலியல் ரீதியான உறவினை மேற்கொள்வதற்குச் சம்மதம்தெரிவிக்கக் கூடிய ஆகக் குறைந்த வயதெல்லையாக 16 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் விவாகவிவாகரத்துச் சட்டத்தினால் ஆளப்படுகின்ற முஸ்லிம்கள் திருமண பந்தத்திற்கு வெளியே உறவுகொள்ளுதல்முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில், பாலியல் உறவினை ஏற்படுத்த சம்மதம் தெரிவிக்கக் கூடியவயதான 16 வயது திருமண வயதாதல் வேண்டும் என விவாதிக்க முடியும்.

மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரையானதுஅங்கத்துவ நாடுகள் தங்களது நாட்டில் திருமணம்செய்வதற்கான ஆகக் குறைந்த வயதொன்றை நிர்ணயிக்க வேண்டும். அது 15 வயதை விடக் குறைவாகஇருக்கக் கூடாது. தகுதியான அதிகாரி ஒருவரின் அனுமதியின்றி குறிப்பிட்ட வயதுக்கு குறைவான வயதில்செய்யப்படுகின்ற திருமணங்கள் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படக் கூடாது என்றுதான் குறிப்பிடப்படுகின்றது.

வளர்ச்சி அடைந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட திருமணம் செய்வதற்கானஆகக் குறைந்த வயதெல்லை 18 என்பது, திறத்தவர்கள் தாமாகத் தமது திருமணத்தைச் செய்துகொள்வதற்கான வயது ஆகும். ஆனால் அந்த நாடுகளில் கூட விசேட சந்தர்ப்பங்களில் அவசியம் ஏற்படுகின்றபோது பெற்றோருடைய சம்மதத்துடனும் நீதிமன்றத்தின் சம்மதத்துடனும் 18 வயதுக்கு முன்னரானதிருமணங்கள் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் காணப்படுகின்றன. இஸ்லாத்தில் திருமணம் ஒன்றின் போதுமணமகளுடையவலியின் (பாதுகாவலரின்) சம்மதம் கட்டாயமான ஒன்றாக இருக்கின்றது. எனவேதிருமணத்திற்கான ஆகக் குறைந்த வயதெல்லை 18 என்ற வாதம் முஸ்லிம்களுக்கு ஏற்புடையதல்ல.

எமது சமூகத்திலிருந்து இளவயது திருமணங்களை இல்லாமலாக்க வேண்டும் என்ற பொதுவான கருத்தில்நாங்கள் அனைவரும் உடன்படுகின்றோம். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், சட்டத்தில் 18 வயதைத் திருமண வயதாக நிர்ணயிப்பது இதற்கு ஒரு தீர்வாக அமையப்போவதில்லை. மாறாகக் கல்வித்தரத்தை அதிகரித்தல், சரியான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல்போன்றவையே இதனைச் சாத்தியமாக்கக் கூடிய பொறிமுறையாகும். சட்டப்படி 16 வயதினைத் திருமணவயதாக நிர்ணயிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்கக் கூடிய வலுவான அடிப்படைகள் காணப்படுகின்றபோதும், சர்வதேச ரீதியாக அடையாளம் செய்யப்பட்டுள்ள 18 வயதைத் திருமணம் செய்யக் கூடிய ஆக குறைந்தவயதாக எமது சட்டத்திலும் உள்வாங்குவதற்கான தேவையை நாமும் கருத்திற்கொள்கிறோம். ஆனால்சட்டத்தில் திருமண வயது தொடர்பான பிரிவிற்கு, விசேட சந்தர்ப்பங்களில் பயன்படுத்தக்கூடியவாறான ஒருவிதிவிலக்கு வாசகமே எமது நியாயபூர்வமான கோரிக்கையாக உள்ளது. அதன் அவசியம் இங்குவிஞ்ஞானபூர்வமாக நிறுவப்பட்டுமுள்ளது.

எனவே, ஆணுக்கும் பெண்ணுக்குமான ஆகக்குறைந்த திருமண வயதாக 18 வயது நிர்ணயம் செய்யப்படுகின்றபொது அந்தக் குறித்த பிரிவிற்கு ஒரு விதிவிலக்கு வாசகம் அவசியம். அந்த விதிவிலக்கு வாசகமானது 16ற்கும்(பதினாறு) 18ற்கும் (பதினெட்டு) இடைப்பட்ட காலத்தில் காதியின் அனுமதியோடு திருமணம் செய்வதைஅனுமதிக்க வேண்டும்.

விதிவிலக்கு வாசகமின்றி 18 வயதை ஆகக்குறைந்த திருமண வயதாக நிர்ணயம் செய்கின்ற எந்தப் பிரிவும்அனுமதிக்கப்படக் கூடாது. பிரதான சட்டத்தின் திருமண வயது தொடர்பான எந்தப் பிரிவுகளோ அல்லதுஅட்டவணைகளோ மேலேயுள்ள பரிந்துரைக்கு மாற்றமாகத் திருத்தப்படக் கூடாது.

4.8 காதி நீதிமன்றம்

காதி நீதிமன்ற முறைமையானது 1930களில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தால் ஆளப்படுகின்றமுஸ்லிம்களது விவாகம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக நிறுவப்பட்ட ஒரு நீதிமன்றமுறைமையாகும். இது பின்வரும் காரணங்களால் பொதுமக்களுக்கு இலகுவாக அணுகச் சாத்தியமான ஒருமுறைமையாகக் கருதப்படுகின்றது.

அணுகுதல் இலகுசட்டத்தரணி ஒருவரின் துணை இல்லாமல் தனது வழக்கினைப் பதிவுசெய்ய முடியும்.

அதிகம் செலவில்லைகுறைந்த அளவான முத்திரைக் கட்டணம் மட்டுமே செலவாகும்.

கால தாமதமாகாது.

வழக்குகள் ரகசியமாக விசாரிக்கப்படும்.

மூன்று மேல்முறையீட்டு வாய்ப்புகள் காணப்படுகின்றன

o காதிகள் சபை

o மேல் முறையீட்டு நீதிமன்றம்

o உயர் நீதிமன்றம்

தற்போது காணப்படுகின்ற காதி முறைமையில் குறைபாடுகள் காணப்படுகின்றன என்பதை நாங்கள்அனைவரும் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால், அக்குறைபாடுகள் காதி முறைமை இல்லாமலாக்கப்படுவதற்குஅடிப்படையாக அமையக்கூடாது. மாறாக, குறைபாடுகள் சீர்செய்யப்பட்டு, காதி நீதிமன்றங்கள் திறம்படச்செயற்படுவதற்கு அவசியமான சட்டத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

முன்மொழியப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலத்தில், பிரதான சட்டத்திற்கு பின்வரும் திருத்தங்களைச் செய்வதன்மூலம் காதி முறைமைக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டிருப்பதையும்காதியினுடைய அந்தஸ்தானது திருமண இணக்கதாரரின் அந்தஸ்துக்குத் தரவிறக்கம்செய்யப்பட்டிருப்பதையும் நாங்கள் அவதானிக்கிறோம். இவை ஏற்றுக்கொள்ளப்பட முடியாததும் மிகவும்கண்டனத்துக்குரியதுமாகும்.

பாகம் II A இனை உள்வாங்குதல், (Marriage Conciliation by Quazis)

பிரிவு 12 நீக்கி, திருத்தச் சட்டமூலத்தின் புதிய பிரிவு 12 உள்வாங்குதல்,

பிரிவுகள் 27, 28, 29 ஆகியவற்றை நீக்கி, திருத்தச் சட்டமூலத்தின் புதிய பிரிவுகளான பிரிவு 27, 28, 29, 29A 29B, 29C, 29D ஆகியவற்றை உள்வாங்குதல்,

பிரிவுகள் 13, 14, 30, 31, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 57, 64, 65, 66, 73, 74, 75, 84, 90, 93 ஆகியவற்றை நீக்குதல்,

பிரிவுகள் 34, 35, 36, 37, 38, 39, (பாகம் V) ஆகியவற்றை நீக்கி, அவற்றிற்கு பதிலாக திருத்தச்சட்டமூலத்தின் புதிய பாகம் v உள்வாங்குதல்,

பிரிவு 67 நீக்கி, திருத்தச் சட்டமூலத்தின் புதிய பிரிவு 67 உள்வாங்குதல்,

பிரிவு 94 நீக்கி, திருத்தச் சட்டமூலத்தின் புதிய பிரிவு 94, 94A ஆகியவற்றை உள்வாங்குதல்,

திருத்தச் சட்டமூலத்தின் புதிய பிரிவுகளான 95A, 95B ஆகியவற்றை உள்வாங்குதல்,

பிரிவுகள் 17(2), 32, 40, 55, 56, 59, 68, 70, 71, 76, 83, 96, 97 ஆகியவற்றை திருத்தம் செய்தல்,

பாகம் VI னுடைய தலைப்பை திருத்துதல் (தலைப்பிலிருந்துகாதிகள்’ ‘காதிகள் சபைஆகியவார்த்தைகளை நீக்குதல்),

பிரிவு 91 (a) யினைத் திருத்துதல். அத்துடன், திருத்தச் சட்டமூலத்தின் புதிய பிரிவுகளான 91A, 91B ஆகியவற்றை உள்வாங்குதல்,

பிரிவு 58 திருத்தி அத்துடன், திருத்தச் சட்டமூலத்தின் புதிய பிரிவுகள் 58A, 58 B ஆகியவற்றைஉள்வாங்குதல்.

மேலே சொல்லப்பட்ட மாற்றங்களை முன்மொழிவதன் மூலம் முன்மொழியப்பட்ட திருத்தச் சட்டமூலமானதுகாதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அதிகாரங்கள், கடமைகளை வெகுவாகக் குறைத்து அதிகமானதிருமணப் பிணக்கு வழக்குகள் ஏனைய நீதிமன்றங்களுக்குச் செல்லக்கூடிய சாத்தியத்தை ஏற்படுத்திஇருக்கின்றது. தற்போது காதி முறைமைக்கு வழங்கப்பட்டிருக்கின்ற நியாயாதிக்கமானது ஏனையநீதிமன்றங்களுக்கு மாற்றப்படுகின்ற போது, அது முஸ்லிம் சமூகத்தை எதிரிடையாக பாதிக்கும் (பொருளாதாரச்செலவு, நேர விரையம், சட்டத்தரணிகளை நாடுகின்ற சுமை போன்றன) குறிப்பாக, அநேகமான முஸ்லிம்பெண்கள், தங்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற எந்தவிதமான திருமணம் சார் அநீதிகளுக்கும் நிவாரணம்தேடிச்செல்வதை இது தடுக்கும். இந்நிலைமை அப்பெண்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதோடு, அவர்களுடைய உளவியல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பாக அமையும். தற்போது இருக்கின்ற காதி நீதிமன்றமுறைமையில் பாரிய மாற்றங்களைச் செய்ய முன்னர் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய முற்றிலும்கலாச்சாரம் சார்ந்த பிரச்சினைகள் இவையாகும். ‘எமது சமூகத்தில் இருக்கின்ற பெண்களைப்பாதுகாக்கின்றோம்என்ற கோஷத்தோடு அல்லதுபெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதிலிருந்தும் முறைதவறி நடத்தப்படுவதிலிருந்தும் பாதுகாக்கின்றோம்என்ற கோஷத்துடனும் முஸ்லிம் விவாக விவாகரத்துச்சட்டத்திற்கு நாம் செய்ய விளைகின்ற திருத்தங்கள் அவர்களை மேலும் கடினமான, ஏற்றுக்கொள்ள முடியாதகஷ்டங்களுக்கு இட்டுச் செல்லக்கூடாது.

முன்மொழியப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலத்தின் பாகம் II A முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில்உள்வாங்கப்பட முடியாது. புதிய பிரிவுகளான 27, 28, 29, 29A, 29B, 29C, 29D (காதி நீதிமன்றங்களுக்குவழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஏனைய நீதிமன்றங்களுக்குக் கையளிக்கின்ற பிரிவுகள்) உள்வாங்கப்படக்கூடாது. மேலும், பிரதான சட்டத்தில் காதிகளுக்குரிய அதிகாரங்கள் கடமைகள் தொடர்பாகவரையறை செய்கின்ற எந்தப் பிரிவுகளும், அந்த அதிகாரங்கள் குறைக்கப்படுகின்ற வகையில் திருத்தங்கள்செய்யப்பட முடியாது.4.9 காதிகள் சபை (Board of Quazis)

இது காதி நீதிமன்றத் தீர்ப்புகளுக்கெதிராக முதலாவதாக மேன் முறையீடு செய்கின்ற நியாயாதிக்கத்தை Board of Quazis கொண்டுள்ளது. இது முஸ்லிம்களின் விவாகரத்துத் தொடர்பாக விவகாரங்களைக் கையாளுகின்ற, மாகாண மேல் நீதிமன்றங்களின் தரத்தை ஒத்த ஒரு அமைப்பாகும்.

முன்மொழியப்பட்டுள்ள திருத்தச் சட்டமானது,

பிரிவுகள் 15, 62, 63, 65, 73, 75, 89, 90, 93 ஆகியவற்றை நீக்குதல்,

பிரிவு 60 நீக்கி, திருத்தச் சட்டத்தின் புதிய பிரிவு 60 உள்வாங்குதல்,

பிரிவுகள் 68, 70, 91,92,97 ஆகியவற்றைத் திருத்துதல்,

பிரிவு 94 நீக்கி, திருத்தச் சட்டத்தின் புதிய பிரிவுகளான 94, 94A ஆகியவற்றை உள்வாங்குதல்.

பாகம் VI னுடைய தலைப்பை திருத்துதல் (தலைப்பிலிருந்துகாதிகள்’ ‘காதிகள் சபைஆகியவார்த்தைகளை நீக்குதல்),

ஆகிய திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம்காதிகள் சபையினை” (Board of Quazis) முற்று முழுவதுமாககாதி முறைமையிலிருந்து நீக்கி, அதன் அதிகாரங்கள் அனைத்தையும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கும்வகையில் ஏற்பாடு செய்துள்ளது.

காதி முறைமையில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களைக் கூர்ந்து அவதானிக்கின்ற போது, அவைமுஸ்லிம்கள் இந்நாட்டின் சம பிரஜைகளாக நூற்றாண்டு காலமாக அனுபவித்து வருகின்ற ஒரு வரப்பிரசாதத்தைநிர்மூலம் செய்கின்ற முயற்சி என்பது எமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. முஸ்லிம் மக்களின் பொறுப்பு வாய்ந்தபிரதிநிதிகளாகிய நாங்கள், எந்தச் சூழ்நிலையிலும் இந்த நாட்டு முஸ்லிம்கள் அனுபவித்து வருகின்றவரப்பிரசாதங்களை அழிக்க நினைக்கின்ற எந்த முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கக்கமாட்டோம்.

4.10 பலதாரமணம்

பலதாரமணமானது சட்டத்தினால் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் அனைவரும்உடன்படுகின்றோம். எனவே, பலதாரமணம் தொடர்பாக, முன்மொழியப்பட்டுள்ள திருத்தச் சட்டத்தில்முன்வைக்கப்பட்டிருக்கின்ற ஏற்பாடுகள் வரவேற்கத்தக்கவை.

ஆனால்;

(a) பலதாரமணத்திற்கு காதி நீதிபதி வழங்குகின்ற அனுமதியினை அல்லது மறுப்பினை மேன்முறையீடுசெய்கின்ற இடமாக காதிகள் சபை குறிப்பிடப்பட வேண்டும். (மாவட்ட நீதிமன்றம் அல்ல)

(b) பலதாரமணம் தொடர்பான குறித்த பிரிவுகளுக்கு மாற்றமாக திருமணம் ஒன்று நிகழுமானால் அதுவலிதற்றதாகக் கொள்ளப்படக்கூடாது. ஆனால் அவ்வாறான திருமணங்களைத் தடுக்கும் வகையில்தண்டனைகளை வகுக்க முடியும்.

4.11 விவாகரத்து

a. திருமணம் மற்றும் விவாகரத்து ஆகிய இரண்டும் அத்தகைய திருமணம் அல்லது விவாகரத்துக்கான தரப்பினர்முஸ்லிம் சட்டத்தின் எந்தப் பிரிவிற்குட்பட்டவர்களோ அந்த சட்டத்தின்படி நிர்வகிக்கப்பட வேண்டும்என்பதால், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் 16 மற்றும் 98(2) பிரிவுகளில் உள்ளவிவாகரத்துஎன்றவார்த்தையை நீக்கக் கூடாது.b. நீதிமன்றத்திற்கு வெளியேயான விவாகரத்து

ஒரு நபர் நீதிமன்றத்திற்கு வெளியே விவாகரத்தை உச்சரித்தால், பிரதான சட்டத்தின் பிரிவு 30 அத்தகையஅறிவிப்பை ஒப்புக்கொள்கிறது மற்றும் இஸ்லாமிய சட்டம் அதை வலிதானது என ஏற்றுக்கொள்வதால்அதனைப் பதிவு செய்கிறது. பிரதான சட்டத்தின் 30வது பிரிவு அப்படியே நடைமுறையில் இருக்கும்படிபரிந்துரைக்கிறோம். எவ்வாறாயினும், இந்த நடைமுறை நிகழ்வதை ஊக்குவிக்காமல் இருப்பதற்காக, நீதிமன்றத்திற்கு வெளியே விவாகரத்து அறிவிப்பை உச்சரிப்பவருக்கு அபராதம் விதிக்கவும்பரிந்துரைக்கிறோம்.

c. ‘ஃபஸ்ஹ்க்கான காரணங்களை அறிவிக்கும் போது, அது திறத்தவர்கள் சார்ந்த பிரிவை ஆளும் முஸ்லிம்சட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்; ஷரீஅத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களைத் தவிர வேறுஎந்த காரணத்தையும் ஃபஸ்ஹ்கான காரணங்களாக எடுத்துக்கொள்ள முடியாது.

d. குலா விவாகரத்து

குலா விவாகரத்து என்பது பிரிவு 28ல் வரையறுக்கப்பட்டு வெளிப்படையாக சேர்க்கப்பட வேண்டும். மேலும், குலாவின் செல்லுபடியாகும் தன்மைக்கு தம்பதிகள் இருவரது சம்மதமும் அவசியமான நிபந்தனையாகும், மேலும்குலாகட்டாயத்தின் கீழ் நடந்தால், ‘குலாஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேற்கூறியவற்றின்அடிப்படையில் எந்தச் சூழ்நிலையிலும் காதி எந்தத் தரப்பினரையும் ஒருகுலாவகைப் பிரிந்து வாழ்தலைச்செய்யக் கட்டாயப்படுத்தக் கூடாது.

4.12 “மத்தா

மத்தாஆனது ஒரு மனைவிக்கு விவாகரத்தான மனைவிக்கு விவாகரத்து அல்லது பிரிந்து வாழ்தலின் போது(தலாக், பஸ்ஹ், குலா) வழங்கப்பட வேண்டும். மதாவைப் பெறத் தகுதி பெறுவதற்கு குறித்த விவாகரத்துஅல்லது பிரிந்து வாழ்தலிற்கு மனைவி/ விவாகரத்தான மனைவி காரணமாய் (திருமணக்குற்றம் புரிந்தவராக) இருக்கக் கூடாது.

a) பின்வரும் சந்தர்ப்பங்களில் மனைவிக்கு விவாகரத்தான மனைவிக்கு மத்தா வழங்கப்பட வேண்டும்.

தலாக்மனைவிமீது திருமணக்குற்றம் இல்லாத போது,

குலாகணவன் மீதுள்ள குறை காரணமாகப் பெறப்படுகின்ற போது,

ஃபஸ்ஹ்கணவன் மீதுள்ள குறையினால் அல்லது கணவன் திருமணக்குற்றம்

புரிந்ததினால் செய்யப்படுகின்றபோது,

b)   காதிமத்தாவழங்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பார்.

c) மத்தாவின் அளவைத் தீர்மானிப்பதில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலத்தின் பிரிவு 34(2) உள்வாங்கப்பட முடியும்.

4.13 சட்டத்தரணிகள் மூலம் பிரசன்னமாகுதல்

காதி நீதிமன்றங்களுக்குச் சட்டத்தரணிகள் மூலம் பிரசன்னமாவதை அனுமதிக்க முடியாது என ஏற்பாடுசெய்கின்ற பிரிவு 74 ஆனது முன்மொழியப்பட்டுள்ள திருத்தச் சட்டத்தில் நீக்கப்பட்டிருப்பதும் ஏற்றுக்கொள்ளமுடியாதது.

4.14 முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து

ஆலோசனை சபை (MMDAB)

MMDAB தொடர்பான பிரிவுகள் (பிரிவு 4,5,6,7) சட்டத்தில் இருந்து நீக்கப்படக் கூடாது. ஆண்கள், பெண்கள்என இருபாலாரும் உட்பட அறிஞர்கள் இதன் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட முடியும். 7 அங்கத்தவர்களின்இருவர் கட்டாயமாக முப்ஃத்தீகளாக இருத்தல் அவசியம்.

5. பரிந்துரைகள்

1951ம் ஆண்டின் 13ம் இலக்க முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்கின்ற போதுபின்பற்றப்பட வேண்டிய பரிந்துரைகளாக பின்வரும் பரிந்துரைகள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால்ஏகமனதாக உடன்பாடு காணப்பட்டுள்ளன.

1) பிரதான சட்டத்தின் தலைப்பிலிருந்து ‘Muslim’ என்ற சொல் நீக்கப்பட்டு ‘persons professing Islam’ என்றசொற்பிரயோகம் உள்வாங்கப்படக் கூடாது.2) பிரதான சட்டத்தில் பிரயோகிக்கப்பட்டுள்ள ‘Nikah ceremony” என்ற சொற்பிரயோகமானது ‘Solemnization’ என்ற சொற்பிரயோகத்தினால் மீளமைக்கப்படக் கூடாது.

3) பிரதான சட்டத்தின் பிரிவு 16 நீக்கப்படாமல் அவ்வாறே தொடர்ந்துமிருத்தல் வேண்டும்.

4) மணமகள் தன்னுடைய சம்மதத்தை வெளிப்படையாகத் தெரிவிப்பதற்காக திருமணப் பதிவு ஆவணத்தில்கையொப்பமிட வேண்டும். ஆனால், இந்த ஏற்பாடானது திருமண ஒப்பந்தத்தின் கட்டாயமான தேவைபாடான, திருமண ஒப்பந்ததாரர்களில் ஒருவரான வலியினுடைய கையொப்பம் என்ற தேவைபாட்டினை இல்லாமலாக்கக்கூடாது.

5) திருமணப் பதிவானது கட்டாயமாக்கப்பட வேண்டும். பதியப்படவில்லை என்ற காரணத்திற்காக இஸ்லாமியத்திருமணம் ஒன்று வலிதற்றதாகாது. ஆனால், திருமணப் பதிவானதுநிக்காஹ்நடக்கின்ற அதே தினத்திலேயேகட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறும் பட்ஷத்தில் அது தண்டனைக்குரியகுற்றமாகக் கருதப்பட வேண்டும். (இது திருமணப் பதிவினை ஊக்குவிக்க உதவும்)

6) பெண்களைத் திருமணப் பதிவாளர்களாக நியமிப்பதானது சமூகத்தில் அவர்கள் நீண்டகாலமாகப் பின்பற்றிவருகின்ற பாரம்பரியங்களில் சில நடைமுறை ரீதியான அசௌகரியங்களை ஏற்படுத்தும். எனவே, பெண்திருமணப் பதிவாளர்களை நியமிப்பதை அனுமதிக்க முடியாது.

7) நீதிச்சேவை ஆணைக்குழுவானது, காதியாக நியமிப்பதற்கு விண்ணப்பிப்பவர்களின் பிராந்தியத்தில், அவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதன் மூலம் அவருடைய கல்வித் தகைமைகள், நன்னடத்தை மேலும், ஆற்றல் போன்றவற்றைப் பரிசீலித்து பொருத்தமான ஒரு நபரைக் காதியாக நியமிக்க வேண்டும்.

ஆணுக்கும் பெண்ணுக்குமான ஆகக்குறைந்த திருமண வயதாக 18 வயது நிர்ணயம் செய்யப்படுகின்ற போது, அந்தக் குறித்த பிரிவிற்கு ஒரு விதிவிலக்கு வாசகம் அவசியம்.

9) காதி முறைமையானது தரவிறக்கம் செய்யப்படக் கூடாது. காதிகள் சபை, காதி முறைமையில் இருந்துஇல்லாமலாக்கப்படக் கூடாது. பிரதான சட்டத்தில் காதிகள் மற்றும் காதிகள் சபைக்கு வழங்கப்பட்டுள்ளஅதிகாரங்களும் கடமைகளும் அவ்வாறே தொடர்ந்தும் இருத்தல் வேண்டும்.

10) பலதாரமணமானது சட்டத்தினால் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

(a) பலதாரமணத்திற்கு காதி நீதிபதி வழங்குகின்ற அனுமதியினை அல்லது மறுப்பினை மேன்முறையீடுசெய்கின்ற இடமாக காதிகள் சபை குறிப்பிடப்பட வேண்டும். (மாவட்ட நீதிமன்றம் அல்ல)

(b) பலதாரமணம் தொடர்பான குறித்த பிரிவுகளுக்கு மாற்றமாக திருமணம் ஒன்று நிகழுமானால் அதுவலிதற்றதாகக்கொள்ளப்படக் கூடாது. ஆனால், அவ்வாறான திருமணங்களைத் தடுக்கும் வகையில்தண்டனைகளை வகுக்க முடியும்.

11) முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் 16 மற்றும் 98(2) பிரிவுகளில் உள்ளவிவாகரத்துஎன்றவார்த்தையை நீக்கக் கூடாது.

12) பிரதான சட்டத்தின் 30வது பிரிவு அப்படியே நடைமுறையில் இருக்கும்படி பரிந்துரைக்கிறோம். எவ்வாறாயினும், இந்த நடைமுறை நிகழ்வதை ஊக்குவிக்காமல் இருப்பதற்காக, நீதிமன்றத்திற்கு வெளியேவிவாகரத்து அறிவிப்பை உச்சரிப்பவருக்கு அபராதம் விதிக்கவும் பரிந்துரைக்கிறோம்.

13) பிரதான சட்டத்தில் காணப்படுகின்ற தலாக் மற்றும் ஃபஸ்ஹ் ஆகிய சொற்பதங்கள் நீக்கப்படக் கூடாது. குலா விவாகரத்து என்பது பிரிவு 28ல் வரையறுக்கப்பட்டு வெளிப்படையாக சேர்க்கப்பட வேண்டும்.

14) மத்தா தொடர்பான பிரிவுகள் சட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும். மத்தாவைத் தீர்மானிக்கின்ற அதிகாரம்காதிக்கு வழங்கப்பட வேண்டும். அது தொடர்பான மேன்முறையீடு காதிகள் சபைக்குச் செய்யப்பட வேண்டும்.

15) பிரிவு 74 ஆனது முன்மொழியப்பட்டுள்ள திருத்தச் சட்டத்தில் நீக்கப்பட்டிருப்பதும் ஏற்றுக்கொள்ளமுடியாதது.

16) முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து ஆலோசனை சபை இல்லாமலாக்கப்படக் கூடாது. அது மேலும்வினைத்திறனாகச் செயற்படும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *