சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளாமல் பக்குவமாக செயற்படவும் – சாகர, சஜித்திடம் வலியுறுத்தல்

(UTV | கொழும்பு) –

நாடு வங்குரோத்தடைந்தது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு குறித்த விடயங்களில்  சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளாமல் பக்குவமாக செயற்படுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், எதிர்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவை வலியுறுத்தியுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் அர்ப்பணிப்புடன் செயற்படும் ஆற்றல் உள்ளவர்களையே சபாநாயகர் குழுவின் உறுப்பினர்களாக நியமித்துள்ளார் என்றார்.

இவ்வாறானதொரு தெரிவுக்குழு அரசியல் திட்டத்தின் படி செயற்படுமாயின் அது நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த நன்மையையும் செய்யாது. நாட்டின் வங்குரோத்து நிலை குறித்து பல்வேறு காரணிகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. இதற்கெல்லாம் காரணமானவர்களைக் கண்டறிந்து விசாரித்து உண்மையை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிக்கு உள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

குழு தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அது குழுவிற்குள் தான் தீர்க்கப்பட வேண்டும். அதற்குள் எதிர்கட்சி தலையிட்டு பக்குவமின்றி செயல்பட்டு மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக அவர்களின் வாழ்க்கையுடன் விளையாடக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத் தரப்பின் கோரிக்கையை அடுத்து இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சியினரும் இந்த விடயம் தொடர்பான பிரேரணையை முன்வைத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் குழுவிற்குத் தங்கள் கட்சிப் பிரதிநிதியை பரிந்துரை செய்ய எதிர்க்கட்சி ஒரு மாத காலம் தாமதித்தது. இந்த விவகாரம் பாராளுமன்ற அலுவல் குழு கூட்டத்தில் பலமுறை எழுப்பப்பட்ட பின்னரே அவர்கள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பினர், என காரியவசம் தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *