தான் கைது செய்யப்படலாம் – டொனால்ட் ட்ரம்ப்

(UTV | கொழும்பு) –

அமெரிக்கப் பாராளுமன்ற வளாகத்தில் 2021 ஜனவரியில் நடந்த வன்முறைகள் தொடர்பில் தான் கைது செய்யப்படலாம் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசின் இரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக தனது வீட்டில் வைத்திருந்தமை தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் மீது ஏற்கெனவே நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாராளுமன்ற வளாக வன்முறைகள் தொடர்பிலும் தன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படலாம் எனவும் தான் கைது செய்யப்படக்கூடும் என எதிர்பார்ப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

2021 ஜனவரி 6 ஆம்  திகதி, ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தி சான்றிதழ் அளிப்பதற்கான நடவடிக்கைகள் பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டபோது, ட்ரம்பின் ஆதரவாளர்களால் பாராளுமன்றத்தில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

4 தினங்களுக்குள் ஜூரிகள் முன்னிலையில் ஆஜராகுமாறு தனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கு அர்த்தம் கைது மற்றும் குற்றச்சாட்டு எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

77 வயதான டொனால்ட் ட்ரம்ப் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கு முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *