”பேச விரும்பினால் மட்டும் என்னுடன் பேசுங்கள்”- ரணில் சம்பந்தன் வாக்குவாதம்

(UTV | கொழும்பு) –

“எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்றாதீர்கள்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இரா.சம்பந்தன் கடும் தொனியில் கூறிய  இந்த வார்த்தைகளால் சினமுற்ற ஜனாதிபதி ரணில் , ”பேச விரும்பினால் மட்டும் என்னுடன் பேசுங்கள். இல்லையேல் நீங்கள் எழுந்து செல்லலாம்”, என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (18) மாலை நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் ஆரம்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரப் பகிர்வு குறித்து பேசவில்லை என கூறப்படுகின்றது.   மாறாகத் தாம் தயார்ப்படுத்திக் கொண்டுவந்த மனித உரிமைகள் சார் விடயம், காணாமல்போனோர் பணிமனை, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாகவே விளக்கமளித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் பேசப்படாத நிலையில், சினமுற்ற இரா. சம்பந்தன் எம்.பி., “எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்றாதீர்கள். அதிகாரப் பகிர்வு குறித்து முதலில் எங்களுடன் பேசுங்கள்…” என்று தெரிவித்துள்ளார்.

இதன் பின்னரே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் குறித்துப் பேசியுள்ளார்.

சம்பந்தன் கடும் தொனியில் கூறிய  இந்த வார்த்தைகளால் சினமுற்ற ஜனாதிபதி ரணில், ”பேச விரும்பினால் மட்டும் என்னுடன் பேசுங்கள். இல்லையேல் நீங்கள் எழுந்து செல்லலாம்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, ‘என்னால் தரக்கூடியவற்றையே தர முடியும். 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதானால் நாடாளுமன்றில் 3இல் 2 பெரும்பான்மை அவசியம். அதனை செய்ய எம்மால் முடியாது’, என்றும் அவர் கோபமாகவே பதிலளித்துள்ளார்.

பொலிஸ் தவிர்ந்த அனைத்திற்கும் ஒப்புக்கொண்ட ரணில் – தமிழ் தலைவர்களுடன் முக்கிய பேச்சு (முழுவிபரம்)

tamilwin

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *