பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு!

(UTV | கொழும்பு) –

2023 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டினுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் தொடர்பான ஆய்வுகளுக்காகவும், பாலின இடைவெளியின் முக்கிய ஆதாரங்களை ஆய்வில் வெளிப்படுத்தியமைக்காகவும் கிளாடியா கோல்டினுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் எனும் வேதியியல் பொறியாளரின் பெயரால் 1901 இல் இருந்து மருத்துவம், பௌதீகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளில் மனித குலத்திற்கு பயனுள்ள சாதனைகளை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *