உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்த நியமனம் : பிரதமரிடம் ஆளுநர் கோரிக்கை

(UTV | கொழும்பு) –   கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிகமாக கடமையாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசின் ஊடாக நிரந்த நியமனம் வழங்குவதே நியாயமானது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிகமாக கடமையாற்றும் ஊழியர்களின் கவனயீர்ப்பு போராட்டத்தின் ஊடாக நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

இது குறித்து ஆளுநர் அலுவலகம் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிகமாக கடமையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவது தொடர்பில் அண்மையில் பிரதமருடன் விசேட கலந்துரையாடலொன்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது அமைச்சரவை பத்திரம் ஊடாக நியமனங்கள் வழங்குவதற்கான அனுமதி பெற்று தருவதாக பிரதமர் ஆளுநரிடம் உறுதியளித்திருந்தார்.

நூருல் ஹுதா உமர்

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *