ஹஜ் விவகார சர்ச்சை : திங்கள் உயர் நீதிமன்றில் வழக்கு

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் முகவர் நிய­ம­னத்தில் அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளதாகவும் உயர் நீதி­மன்­றத்தின் ஹஜ் வழி­காட்­டல்கள் அரச ஹஜ் குழு­வி­னாலும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தி­னாலும் மீறப்­பட்­டுள்­ளதாகவும் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து உயர் நீதி­மன்றில் வழக்­கொன்று எதிர்வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்­யப்­படவுள்­ளது.

2024ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்கு குறிப்­பிட்ட கார­ணங்­களை முன்­வைத்து தடை­யுத்­த­ரவு பிறப்­பிக்­கும்­ப­டியும் (Stay Order) மனுவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வ­ழக்­கினை யுனைடட் டிரவல்ஸ் என்ட் ஹொலிடேஸ் பிரைவட் லிமிடட் (United Travels & Holidays (PVT) LTD) எனும் ஹஜ் முகவர் நிலைய உரி­மை­யாளர் மொஹமட் லரீப் தாக்கல் செய்­யவுள்ளார். பிர­தி­வா­தி­க­ளாக அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்­ராஹிம் அன்ஸார் உட்­பட ஹஜ் குழு, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் இஸட். ஏ.எம். பைஸல், ஹஜ் விசா­ரணைக் குழுவின் தலைவர் உட்­பட உறுப்­பி­னர்கள் பெயர் குறிப்­பி­டப்­படவுள்­ளனர்.

இவ்­வ­ருடம் 3500 ஹஜ் கோட்டா சவூதி அரே­பிய ஹஜ் உம்ரா அமைச்­சினால் இலங்­கைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த 3500 ஹஜ் கோட்டா 93 ஹஜ் முக­வர்­க­ளுக்­கி­டையில் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பிட்ட 93 ஹஜ் முக­வர்­களும் நேர்­முகப் பரீட்­சை­யொன்றின் மூலம் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

ஹஜ்­குழு தலை­வ­ருக்கு,ம் ஹஜ் முக­வ­ருக்­கு­மி­டையில் வாய்த்­தர்க்கம்

கடந்த வருடம் (2023) ஹஜ் யாத்­தி­ரி­கர்­களை ஹஜ் கட­மைக்கு அழைத்துச் சென்ற ஹஜ் முகவர் நிலை­யங்­களில் ஒன்­றான யுனைடட் டிரவல்ஸ் என்ட் ஹொலிடேஸ் பிரைவட் லிமிடட் மூலம் ஹஜ் யாத்­திரை மேற்­கொண்ட ஒரு­வரால் முன்­வைக்­கப்­பட்ட முறைப்­பாட்­டினை அடுத்து அந்­நி­று­வ­னத்­துக்கு ஹஜ் முறைப்­பாடு விசா­ரணைக் குழு 2 வரு­ட­ஙகள் தற்­கா­லிக தடை விதித்­தது. ஹஜ் முறைப்­பாடு விசா­ரணை குழு­வினால் விதிக்­கப்­பட்ட இத் தண்­ட­னைக்­கெ­தி­ராக குறிப்­பிட்ட முகவர் நிலைய உரி­மை­யாளர் முஹம்மட் லரீப் மேன்­மு­றை­யீடு (Appeal) செய்­தி­ருந்தார்.

குறிப்­பிட்ட மேன்­மு­றை­யீடு தொடர்பில் பல வாரங்­க­ளாக நட­வ­டிக்கை ஏதும் எடுக்­கப்­ப­டாத நிலையில் ஹஜ் முகவர் நிலைய உரி­மையாளர் மொஹமட் லரீப் அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்­ராஹிம் அன்­ஸாரை சந்­திக்க கடந்த பெப்­ர­வரி மாதம் 26ஆம் திகதி கொழும்பு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் இயங்கி வரும் அரச ஹஜ் குழுவின் அலு­வ­ல­கத்­துக்குச் சென்­றுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் முஹம்மட் லரீப் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில், ‘நான் அரச ஹஜ் குழுவின் தலை­வரைச் சந்­திக்க அவ­ரது அலு­வ­ல­கத்­துக்குச் சென்று எனது மேன்­மு­றை­யீடு தொடர்பில் 5 நிமி­டங்கள் பேச வேண்டும் என்றேன். அவர் அதற்கு இட­ம­ளிக்­க­வில்லை. நீங்கள் வெளியே செல்­லுங்கள் இங்கு வர­வேண்டாம் என உத்­த­ர­விட்டார். மேன்­மு­றை­யீடு தொடர்­பி­லான தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்தால் அதற்­கான கடி­தத்தை தாருங்கள் என்றேன். முடி­யாது வெளியே போ’ என்றார். இத­னை­ய­டுத்து எங்­க­ளுக்குள் வாய்த்­தர்க்கம் ஏற்­பட்­டது. நான் அவரை ஏசி­விட்டேன் என்றார்.

முரண்­பா­டு­க­ளுக்குக் காரணம்

மொஹமட் லரீப் முரண்­பா­டு­க­ளுக்­கான கார­ணங்­களை விளக்­கினார். ‘இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் முகவர் நிய­ம­னத்­துக்­கான நேர்­முகப் பரீட்சை நடத்­தப்­பட்­ட­போது முகவர் நிய­மனம் பெறு­வ­தாயின் நேர்­முகப் பரீட்­சையில் 50க்கு மேற்­பட்ட புள்­ளிகள் பெற வேண்­டு­மெனக் கூறப்­பட்­டது. ஆனால் நேர்­முகப் பரீட்­சையில் எனது ஹஜ் முகவர் நிறு­வனம் 68 புள்­ளி­களைப் பெற்­றது.

2023ஆம் ஆண்டு ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் எனது முகவர் நிலை­யத்­துக்கு எதி­ராக 2 முறைப்­பா­டுகள் ஹஜ் முறைப்­பாடு விசா­ரணைக் குழு­வுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. உயர் நீதி­மன்றின் ஹஜ் வழி­காட்­டல்­களின் படி ஹஜ் முகவர் நிய­மன நேர்­முகப் பரீட்­சைக்கு முன்பே முறைப்­பாடு தொடர்­பான விசா­ரணை நடாத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால் நேர்­மு­கப்­ப­ரீட்சை நடாத்­தப்­பட்­டதன் பின்பே முறைப்­பாடு தொடர்­பான விசா­ரணை நடத்­தப்­பட்­டது. முறை­ப்பா­டுகள் ஹஜ் யாத்­திரை நிறை­வுற்று 3 மாத காலத்­துக்குள் நடத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால் 5 மாதங்­களின் பின்பே விசா­ர­ணைகள் நடாத்­தப்­பட்­டன. விசா­ர­ணையின் பின்பு ஹஜ் தொடர்­பான முறைப்­பாட்­டுக்கு 2 இலட்சம் ரூபாவும், உம்ரா பிரச்­சினை தொடர்­பான முறைப்­பாட்­டுக்கு 3 இலட்சம் ரூபாவும் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு செலுத்­தும்­படி உத்­த­ர­வி­டப்­பட்­டது. நான் அவ்­வாறே குறிப்­பிட்ட தொகையை சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு செலுத்­தினேன்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29ஆம் திகதி எனது ஹஜ் நிறு­வ­னத்­துக்கு 2 வருட கால தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக வாய்­மூலம் தெரி­விக்­கப்­பட்­டது. இத்­தடை உத்­த­ரவை ஹஜ் முறைப்­பாடு விசா­ரணைக் குழுவே அறி­வித்­தி­ருந்­தது.

இந்தத் தீர்­மா­னத்­துக்கு எதி­ராக நான் டிசம்பர் மாதம் 30ஆம் திகதி அரச ஹஜ் கமிட்­டிக்கும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கும் மேன்­மு­றை­யீடு செய்தேன். 2024 ஜன­வரி 2ஆம் திகதி அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்­க­வுக்கும் முறை­யீடு செய்தேன்.

தொடர்ந்து எனது நிறு­வ­னத்­துக்கு விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­பட்ட தடை­யுத்­த­ரவு (டிசம்பர் 29) தொடர்­பாக எழுத்து மூலம் கோரி­ய­தற்கு இணங்க 2024 ஜன­வரி 17ஆம் திகதி கடிதம் தரப்­பட்­டது. இத­னை­ய­டுத்து எனது சட்­டத்­த­ரணி தொடர்பு கொண்டு பேசி­ய­தை­ய­டுத்து மீண்டும் என்­னிடம் மேன்­மு­றை­யீடு தொடர்­பான கடிதம் கோரப்­பட்­டது. அத­னையும் கொடுத்தேன். எனது மேன்­மு­றை­யீட்­டினை ஹஜ் முறைப்­பாடு விசா­ர­ணைக்கு குழு­வுக்கு அனுப்பி வைப்­ப­தாக கூறி­னார்கள்.

பிறகு கடந்த பெப்­ர­வரி மாதம் 7ஆம் திகதி விசா­ர­ணைக்கு என்னை அழைத்­தது. நான் சட்­டத்­த­ர­ணி­யுடன் சென்றேன். இவ்­வி­ட­யத்தில் தீர்­மானம் மேற்­கொள்­வ­தற்கு உயர் நீதி­மன்ற ஹஜ் வழி­காட்­டல்­க­ளின்­படி அரச ஹஜ் குழு­வுக்கே அதி­கா­ர­முள்­ளது என விசா­ர­ணைக்­கு­ழுவின் தலைவர் தெரி­வித்தார்.

இந்த அறி­வு­றுத்­தலை அடுத்து மீண்டும் அரச ஹஜ் குழுவின் தலை­வ­ருக்கு கடிதம் கொடுத்தேன். எனது மேன்­மு­றை­யீடு தொடர்பில் எனக்கு எவ்­வித அழைப்பும் கிடைக்­க­வில்லை. எவ்­வித தீர்வும் கிட்­ட­வில்லை. அமைச்சர் மற்றும் அரச ஹஜ் குழு­வுக்கு எனது நிறு­வ­னத்­துக்கு ஹஜ் அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கு­வ­தற்கு விருப்­ப­மில்லை எனத் தெரி­விக்­கப்­பட்­டது. இது தொடர்பில் நான் ஹஜ் குழு உறுப்­பினர் ஒரு­வரைத் தொடர்பு கொண்டு விசா­ரித்தேன். இவ்­வி­வ­காரம் ஹஜ் குழு உறுப்­பி­னர்­க­ளுக்கு தெரி­யாது. ஹஜ் குழு கூட்டம் நடை­பெ­ற­வில்லை என்று அவர் கூறினார்.

இத­னை­ய­டுத்தே கடந்த பெப்­ர­வரி மாதம் அரச ஹஜ் குழுத் தலை­வரைச் சந்­திக்க அவ­ரது அலு­வ­லகம் சென்றேன். அவர் என்னை அலு­வ­ல­கத்­தி­லி­ருந்தும் வெளி­யேற்­றினார். அப்­போதே முரண்­பாடு ஏற்­பட்டு எங்­க­ளுக்குள் வாய்த்­தர்க்கம் ஏற்­பட்­டது. நானும் ஹஜ் குழுத் தலை­வரை ஏசினேன் என்றார்.

மார்ச் 1ஆம் திக­தியே கடிதம் கிடைத்­தது

இவ்­வ­ருடம் ஹஜ் முக­வ­ராக நான் நிய­மிக்­கப்­ப­டாமை தொடர்­பி­லான எனது மேன்­மு­றை­யீட்டு மனுவை கவ­னத்திற் கொள்ள முடி­யாது என எனக்கு மார்ச் மாதம் 1ஆம் திக­தியே முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் உத்­தி­யோக பூர்வ கடிதம் கிடைக்­கப்­பெற்­றது.

ஆனால் உயர் நீதி­மன்றம் ஏற்­க­னவே வழங்­கி­யுள்ள ஹஜ் வழி­காட்­டல்­களின் படி எனது மேன்­மு­றை­யீட்டு மனு­வினை விசா­ரித்து தீர்ப்­பொன்று வழங்­கப்­படும் வரை ஹஜ் கோட்டா பிரித்து வழங்­கப்­பட முடி­யாது. அத்­தோடு எனது மேன்­மு­றை­யீட்டு மனு தொடர்­பான விசா­ர­ணைக்கு அரச ஹஜ் குழு எனக்கு அழைப்பு விடுக்­கவும் இல்லை. எனது மேன்­மு­றை­யீட்டு மனு­வினை தீர்வு பெற்­றுத்­த­ராது வேண்­டு­மென்றே கால தாம­தப்­ப­டுத்­தி­ய­மைக்கு அரச ஹஜ் குழுவின் தலை­வரே பொறுப்புக் கூற வேண்டும். இக்­கா­ர­ணங்­களை முன்­வைத்தே வழக்கு தாக்கல் செய்­யப்­படவுள்­ளது.

ஏன் ஹஜ் அனு­ம­திப்­பத்­திரம் மறுக்­கப்­பட்­டது

கடந்த வருடம் 2023இல் எனது ஹஜ் நிறு­வ­னத்­துக்கு 25 ஹஜ் கோட்டா ஒதுக்­கப்­பட்­டது. எனது நிறு­வ­னத்­துக்கு ஒதுக்­கப்­பட்ட 25 ஹஜ் கோட்­டாவில் 10 கோட்­டாவை ஹஜ் குழுவின் தலைவர் எனக்குத் தெரி­யா­மலே வேறு இரு ஹஜ் முக­வர்­க­ளுக்கு தலா 5 கோட்டா வீதம் வழங்­கி­யி­ருந்தார். இறு­தி­வரை அவர் இது­பற்றி என்­னிடம் தெரி­விக்­க­வில்லை. எனவே இது தொடர்பில் ஹஜ் குழுவின் தலை­வ­ருக்கு எதி­ராக நானும் ஹஜ் முறைப்­பாடு விசா­ரணைக் குழு­வுக்கு முறைப்­பாடு செய்­தி­ருந்தேன். அவர் விசா­ரணைக் குழு­வினால் விசா­ரிக்­கப்­பட்டார். இதன் கார­ண­மா­கவே என்னைப் பழி­வாங்கும் நோக்­கோடு 2 வருட தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது என்றும் மொஹமட் லரீப் தெரி­வித்தார்.

விசா­ர­ணையின் பின்பே தடை­யுத்­த­ரவு

2023 ஆம் ஆண்டு ஹஜ் யாத்­தி­ரைக்கு பய­ணி­களை அழைத்துச் சென்ற முக­வர்கள் சிலர் தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு 13 முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றன. இம்­மு­றைப்­பா­டுகள் ஓய்வு பெற்ற நீதிவான் ஒரு­வரின் தலை­மை­யி­லான மூவர் கொண்ட விசா­ரணைக் குழு­வினால் விசா­ரிக்­கப்­பட்­டன. குறிப்­பிட்ட ஹஜ் முகவர் நிறு­வ­னத்­துக்கும் எதி­ராக முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றி­ருந்­தன. விசா­ர­ணையின் போது குற்­றச்­சாட்­டுகள் நிரூ­பிக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்தே அந்­நி­று­வ­னத்­துக்கு 2 வருட தடை­யுத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல் தெரி­வித்தார்.

மொஹமட் லரீப் உட்­பட மூன்று ஹஜ் முக­வர்­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுகள் நிரூ­பிக்­கப்­பட்­டதால் மொஹமட் லரீபின் ஹஜ் நிறு­வ­னத்­துக்கு 2 வருட கால தடை­யுத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. மேலும் ஒரு ஹஜ் முக­வரின் கோட்­டாவை 50 வீதத்­தாலும், மற்­றைய முக­வரின் கோட்­டாவை 25 வீதத்­தாலும் குறைக்கும் படி ஹஜ் முறைப்­பாடு விசா­ர­ணைக்­குழு தீர்ப்பு வழங்­கி­யி­ருந்­தது. அந்தத் தீர்ப்பே நிறை­வேற்­றப்­பட்­டது. இத்­தீர்ப்பு தொடர்பில் முகவர் மொஹமட் லரீ­புக்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கடிதம் மூலம் கடந்த முதலாம் திகதி அறி­விக்­கப்­பட்­டது. அவ­ரது மேன்­மு­றை­யீடு ஏற்றுக் கொள்­ளப்­ப­ட­வில்லை எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது என்றும் கூறினார்.

முகவர் முஹம்மட் லரீப்

எனது மேன்­மு­றை­யீடு தொடர்பில் காலம் கடந்து மார்ச் 1ஆம் திக­தியே உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டது.

எனது முகவர் நிறு­வனம் கடந்த 8 வரு­டங்­க­ளாக இயங்கி வரு­கி­றது. உயர் நீதி­மன்றம் ஏற்­க­னவே வழங்­கிய ஹஜ் வழி­காட்­டல்­க­ளின்­படி புதிய முகவர் ஒரு­வ­ருக்கு எதி­ராக முறைப்­பாடு செய்­யப்­பட்டால் முதலில் அவர் எச்­ச­ரிக்­கப்­பட வேண்டும். இரண்­டா­வது தட­வையும் முறைப்­பாடு கிடைத்தால் இடைக்­கால தடை விதிக்­கப்­ப­டலாம். 8 வருட எனது சேவையில் இந்த முறையே எனக்­கெ­தி­ராக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன என்றார்.

நீதிமன்றின் ஹஜ் வழிகாட்டல் சரியாக பின்பற்றப்பட வேண்டும்

ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் உயர் நீதி­மன்றம் ஏற்­க­னவே வழி­காட்­டல்­களை வழங்­கி­யுள்­ளது. அவ்­வ­ழி­காட்­டல்கள் தொடர்ந்தும் அமுலில் உள்­ளன. ஹஜ் வழி­காட்­டல்கள் முறை­யாக பின்­பற்­றப்­பட்­டி­ருந்தால் ஹஜ் விவ­கா­ரத்தில் இவ்­வா­றான சர்ச்­சைகள் தோன்­று­வ­தற்கு வாய்ப்­பி­ருக்­காது. எனவே சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள், ஹஜ் குழு என்­பன இது தொடர்பில் கரிசனை கொள்ள வேண்டும். –

விடி­வெ­ள்ளி – Faleel

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *