வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்!

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது பொலிசாரால் கைது செய்யப்பட்ட 8 பேரும் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு இன்று (10.03) அழைத்துச் செல்லப்பட்டனர்.

சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்டவர்கள் மீது பொலிசார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டர்களிடம் காயங்கள் காணப்படுவதாகவும் கைது செய்யப்பட்ட 8 பேர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகள் நேற்று (09.03) நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதனையடுத்து, குறித்த 8 பேரையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் கொண்டு சென்று முன்னிலைப்படுத்துமாறு மன்று உத்தரவிட்டிருந்தது. அதற்கமைவாக இன்று (10.03) சட்ட வைத்திய அதிகாரிடம் அழைத்து செல்லப்பட்டனர்.

இன்று (10.03) விடுமுறை தினம் என்பதால் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் இல்லை. இதனால் வைத்தியசாலையில் வைத்து அவர்களுக்கான மாற்று ஆடைகள் வழங்குவதற்கு கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் சிறைக்காவலர்கள் அதற்கு அனுமதி வழங்கியிருக்கவில்லை. இதனால் கடந்த இரு தினங்களாக அவர்கள் கைது செய்யப்படும் போது அணிந்திருந்த ஆடைகளே அணிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

vasantharupan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *