உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இந்தியா தூதுவருக்கு மனநல பிரச்சினை?

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் இந்தியாவைத் தொடர்புபடுத்தும் சர்ச்சைக்குரிய கருத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா  குற்றஞ்சாட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு படுகொலைகளின் பின்னணியில் இந்தியா இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அத்துடன் ஒரு இந்திய இராஜதந்திரி, தாக்குதல் குறித்து தன்னிடம் ஒப்புக்கொண்டது மட்டுமின்றி அதற்கான காரணத்தையும் தன்னிடம் கூறியதாக, தேசிய செய்தித்தாள் ஒன்றில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி ஹர்ஷ டி சில்வா சில்வா தமது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களையும் இந்தியாவிடம் ஒப்படைக்க இலங்கை பரிசீலிக்காததே தாக்குதலுக்கான காரணம் என்று அந்த இந்திய இராஜதந்திரி கூறியதாக மைத்ரி குறிப்பிட்டுள்ளார்.

மைத்ரியின் குறித்த கூற்றுக்கள் தொடர்பில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய ஹர்ஷ டி சில்வா, இது மிகவும் பொறுப்பற்ற கருத்து என குறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால் இதுவரை மைத்ரிபால கூறிய அனைத்து அறிக்கைகளுக்கும் என்ன ஆனது? இந்தப் பிரச்சினையில் இன்னொரு நாட்டை இழுப்பதில் இன்னும் பல சிக்கல்கள் எழும்.

இந்தநிலையில் மனநலப் பிரச்சினை உள்ள ஒரு தூதரக அதிகாரியைத் தவிர, வேறு யாராவது இப்படி வாக்குமூலம் கொடுப்பார்களா?” என்று ஹர்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *