வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம் வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற செயற்குழுக் கூட்டத்தின் போது இந்த விடயம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்க முடியாவிட்டால் பெறுமதி குறைந்த வாகனமொன்றை இறக்குமதி செய்வதற்கேனும் அனுமதி வழங்குமாறு கோரியுள்ளனர்.
எதிர்வரும் தேர்தல்களின் போது வாகனமொன்று இன்றி பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவது மிகுந்த சவால் மிக்கது என தெரிவித்துள்ளனர்.
எந்தவொரு வாகனமும் இன்றி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்றினை பிரதிநிதித்துவம் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கடந்த 2015ம் ஆண்டின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.