உடம்பில் கடைசி துளி இரத்தம் இருக்கும் வரை மக்களுக்கு இரவு பகல் பாராது சேவையாற்றவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் வெற்றிபெறும் யுகம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி முதல் ஆரம்பமாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹியங்கணையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.