ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் மொஹமட் யூனுஸை தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இடைக்கால அரசாங்கத்தின் தலைவரால் முடியும் என தாம் நம்புவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷில் உள்ள இலங்கை முதலீட்டாளர்களை அங்கேயே தொடர்ந்து தங்கி முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தாம் அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி, மொஹமட் யூனுஸிடம் கூறியுள்ளார்.
பங்களாதேஷ் பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைய இலங்கை சகல உதவிகளையும் வழங்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இங்கு உரையாற்றிய பங்களாதேஷ் இடைக்கால தலைவர், ஜனாதிபதியின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, விரைவில் பங்களாதேஷுக்கு வந்து நாட்டை மீட்டெடுக்க தேவையான வழிகாட்டுதலை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.