தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ் முற்போக்குக் கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவை வழங்குவதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான வேலுக்குமார் தனது முடிவை இன்று வியாழக்கிழமை (15) அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார், இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு செல்வதற்கு முன்னர் பிளவர் வீதியில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு சென்ற வேலுகுமார் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.