எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 17 சுயேச்சை வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எரிவாயு சிலிண்டரும், எம் திலகராஜாவுக்கு சிறகு சின்னமும் மற்றும் பாக்கிய செல்வம் அரியநேந்திரனுக்கு சங்கு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.