தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை (16) மீரிகம கந்தன்கமுவ ஸ்ரீ வித்யாவாச பிரிவென் மஹா விகாரையில் ராமக்ஞ மஹா நிக்காயவின் மஹா நாயக்க தேரர் சங்கைக்குரிய மக்குலேவே விமல நாயக்க தேரரை சந்தித்தார்.
இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமை பற்றி அவரை உள்ளிட்ட மஹா சங்கத்தினருடன் கலந்துரையாடிய அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் வெற்றி பெறுவதற்கான அவர்களின் நல்லாசியை பெற்றுக்கொண்டார்.
இத்தருணத்தில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத்தும் பங்கேற்றார்.