சரியான நேரத்தில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. ஏனைய கட்சிகள் தமது ஆதரவு நிலைப்பாட்டை வெளியிட்ட நிலையில் தமிழரசுக்கட்சி எப்பொழுது தமது நிலைப்பாட்டை வெளியிடும் என கிளிநொச்சியில் இன்று ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில் கடந்த 3 ஜனாதிபதித் தேர்தல்களிலும் தேர்தலுக்கு அண்மித்த காலத்தில் தான் எமது நிலைப்பாட்டை அறிவித்தோம்.
இந்த தடவை அது ஒரு வித்தியாசமாக வரவேண்டும் என்ற எந்த தேவையும் கிடையாது. எல்லா வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கையை எதிர்பார்க்கிறோம்.
அவர்களின் தேர்தல் அறிக்கையில் முழு நாட்டுக்கும் என்ன சொல்லியிருக்கிறார் என பார்த்து சரியான நேரத்தில் அறிவிப்போம் என தெரிவித்தார்.