தமிழக சட்ட சபையின் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை

(UDHAYAM, CHENNAI) – தமிழக சட்ட சபையின் சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்தலைவர் மு.க.ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் முதலமைச்சர் பழனிச்சாமி தொடர்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை மீறி சபாநாயகர் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த வாக்கெடுப்பை ரகசியமாக நடத்துமாறு வலியுறுத்தியும் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் பலவந்தமாக காவலாளிகளைக் கொண்டு வெளியேற்றினார்.

மேலும் காவலாளி வேடத்தில் சிரேஷ்ட்ட காவற்துறை அதிகாரி ஒருவரும் செயற்பட்டிருந்தார்.

இவ்வாறான விடயங்களுக்கு மத்தியில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *