சவூதி சென்ற இலங்கை பெண் தொடர்பில் வந்த அழைப்பு

(UDHAYAM, COLOMBO) – சவூதி அரேபியாவிற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்ற பெண்ணொருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மஹவ பிரதேசத்தை சேர்ந்த நிலுபமா சங்ஜிவனி என்ற பெண் கடந்த 2016ம் ஆண்டு சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் வரை தொலைப்பேசியினூடாக கதைத்து வந்தார் என அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் , கடந்த ஏப்ரல் 25ம் திகதி நிலுபமா சவுதியில் மருத்துவமனையொன்றில் உயிரிழந்து விட்டதாக அவர்களது குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியை தொடர்ந்து…

Read More

மான்செஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பில் இலங்கை கண்டனம்

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரில் (Manchester )நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 19 பேர் உயிரிழந்ததுடன் 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மான்செஸ்டர் நகரில் அமெரிக்க பாடகர் அரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்போது நேற்று நள்ளிரவு இரவு 10.30 (லண்டன் நேரம் ) மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது. இதனையடுத்து, இசை நிகழ்ச்சியை பார்வையிட்ட மக்கள் சிதறி ஓடினர். இக்குண்டுவெடிப்பில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் பலியானோர்…

Read More

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் அகதிகளுக்கு அகதி அந்தஸ்து மறுப்பு – ஹொங்கொங் அரசாங்கத்துக்கு கண்டனம்!

(UDHAYAM, COLOMBO) – ஹொங்கொங்கில் தமக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் அகதிகளுக்கு அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டமைக்காக, ஹொங்கொங் அரசாங்கத்துக்கு எட்வேட் ஸ்னோவ்டன் கண்டனம் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் பல இரகசியங்களை கசியவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு முகவரான எட்வேட் ஸ்னோவ்டன் 2013 ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பிச்சென்று ஹொங்கொங்கில் அடைக்கலம் பெற்றார். இதன்போது இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் அகதிகள் அவருக்கு அடைக்கலம் வழங்கியுள்ளனர். இதன் காரணமாக இலங்கை மற்றும் பிலிபபைன்ஸ் அகதிகளின் அகதி…

Read More

இலங்கை அணி வெற்றி

(UDHAYAM, COLOMBO) – ஆசிய கிண்ண ரக்பி போட்டித்தொடருடன் தொடர்புடைய மலேசியாவில் இடம்பெறும் முதல் பிரிவு போட்டியொன்றில் இலங்கை அணி 33க்கு 17 என்ற அடிப்படையில் இன்று வெற்றிப்பெற்றுள்ளது. அது , ஐக்கிய அரபு இராச்சியத்தை தோற்கடித்தாகும்.

Read More

சிங்கப்பூர் – இலங்கை வர்த்தக உடன்படிக்கை

(UDHAYAM, COLOMBO) – சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கை ஜூலை மாதத்திற்கு முன்னர் கைச்சாத்திடப்படும் என அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார். சீன கம்பனியுடனும் இந்த வருடத்திற்குள் புதிய வர்த்தக உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. சர்வதேச உறவுகளை விரிவுபடுத்தி நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும். இதற்கு சர்வதேச சமூகத்தின் உயர்ந்த பட்ச ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளது. சிங்கப்பூருடன் வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் புதிய சுதந்திர வர்த்தக வலயத்தை அமைக்க சந்தர்ப்பம்…

Read More

நேபாள ஜனாதிபதி நாளை இலங்கை விஜயம்

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச வெசாக் தின வைபவத்தில் கலந்துகொள்வதற்காக நேபாள ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி நாளை இலங்கை வருகின்றார். ஐநா வெசாக் தின வைபத்தின் நிறைவு நிகழ்ச்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் மஹாமடுவ மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. நேபாள் ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார். இன்று சர்வதேச வெசாக் தின வைபவம் ஆரம்பமாகின்றது. இந்த நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவுள்ளார்.

Read More

ஐயாயிரம் ரூபாய் நோட்டுகள் இரத்துச் செய்யப்படமாட்டா – இலங்கை மத்திய வங்கி ஆளுநர்

(UDHAYAM, COLOMBO) – தற்போது புழக்கத்திலுள்ள ஐயாயிரம் ரூபாய் நோட்டுகளை எவ்விதத்திலும் ரத்துச் செய்யப் போவதில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். இன்று பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த விடயத்தை குறிப்பிட்ட அவர், தற்போது புழக்கத்திலுள்ள ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள் நாட்டின் சட்டத்திற்கு அமைவாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஏற்றுமதியை இலக்காக கொண்ட உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது நோக்கமாகும் என்றும் தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர்…

Read More

இந்தியப் பிரதமர் நாளை இலங்கை வருகிறார்

(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய நாடுகளின் 14 வது சர்வதேச வெசாக் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நாளை இலங்கை வருகிறார். பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் வெசாக் தின நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். கொள்ளுப்பிட்டி கங்காராம விஹாரையில் நடைபெறும் விசேட மத வழிபாட்டு நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொள்வார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இந்தியப் பிரதமர் நாளை இரவு சந்தித்து பேசவுள்ளார். கண்டி…

Read More

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை மத்திய வங்கி (02.05.2017) வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 45 சதம்  விற்பனை பெறுமதி 154 ரூபா 25 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 193 ரூபா 37 சதம். விற்பனை பெறுமதி 199 ரூபா 92 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 163 ரூபா 11 சதம் விற்பனை பெறுமதி 169 ரூபா 32 சதம். சுவிஸ்…

Read More

இலங்கை வலைப்பந்தாட்ட அணி தென்கொரியா பயணம்

(UDHAYAM, COLOMBO) – 10 ஆவது தெற்காசிய இளையோர் வலைப்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை வலைப்பந்தாட்ட அணி தென்கொரியா பயணமானது. தென்கொரியாவின் ஜியொன்ஜு விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 7ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் இலங்கை அணி ஏ பிரிவில் போட்டியிடவுள்ளது. ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த 10 நாடுகள் கலந்து கொள்ளவுள்ள இந்த போட்டி 14ம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. இலங்கை அணி முதல் சுற்றில் தாய்லாந்து, மாலைதீவு, பாகிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகளுடன்  போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More