ரணிலை பூச்சியத்துக்கு இறக்கினோம் – சுஜீவ சேனசிங்க

ராஜபக்ஷ்வினருடன் இணைந்து ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியையும் ஆதரவாளர்களையும் அழித்துவந்தார். அதனை பொறுத்துக்கொள்ள முடியாமலே சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி கடந்த பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை பூச்சியத்துக்கு இறக்கினோம். செப்டம்பர் 21ஆம் திகதிக்கு பின்னர், மீண்டும் நாட்டை அபிவிருத்தி செய்த லலித், காமினி, ரணசிங்க பிரேமதாச யுகத்தை உருவாக்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். மாவனெல்லை பிரதேசத்தில் திங்கட்கிழமை (19) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில்…

Read More

சிவப்புப் பிடியாணை குற்றவாளி அர்ஜுன மகேந்திரனை கைது செய்து அழைத்து வருவேன் – அநுர

தாம் ஜனாதிபதியானால், மத்திய வங்கி மோசடி தொடர்பில் நீதிமன்றத்தால் தற்போது தேடப்பட்டு வரும் சிவப்புப் பிடியாணை குற்றவாளி அர்ஜுன மகேந்திரனை மீண்டும் அழைத்து வருவேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கிரிபத்கொட பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

Read More

மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் – நாமல் ராஜபக்ஷ

செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் தேசிய உற்பத்திகளை முன்னிலைப்படுத்திய பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்போம். சுய நல தேவைகளுக்காக எம்மை விட்டு விலகிச் சென்றவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். திஸ்ஸமஹராம மகா விகாரையில் ஞாயிற்றுக்கிழமை (18)  வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதித் தேர்தலுக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.சர்வமத வழிபாடுகளுடன்…

Read More

ரணில் இத்துப்போன காஸ் சிலிண்டர் – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

நாட்டை வீழ்ச்சியடையச்செய்த மொட்டு கட்சிக் காரர்களுடன் இணைந்து தேர்தலில் வெற்றிபெற முடியும் என்றே ரணில் விக்ரமசிங்க நினைத்தார். ஆனால் தற்போது நாமல் ராஜபக்ஷ் மொட்டு கட்சியில் போட்டியிடுவதால், அவருக்கு வெற்றிபெறுவது நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது. அதனால் ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்த முயற்சிக்கிறார். ரணில் விக்ரமசிங்க இத்துப்போன காஸ் சிலிண்டர். அதில் காஸ் நிரப்ப முற்பட்டால்  வெடித்து சிதறிவிடும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். ருவன்வெல்ல பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (18)…

Read More

ஜனாதிபதி தேர்தலில் இ.தொ.கா ரணிலுக்கு ஆதரவு

2024 செப்டம்பர் 21 திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று (18) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இ.தொ.க. தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன் ஆகியோர் இணைந்து இதனை அறிவித்தனர். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் யாருக்கு…

Read More

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம் – சஜித் பிரேமதாச தெரிவிப்பு.

ஜனாதிபதி முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவோம் என தலைவர்கள் வெட்டிக் கருத்து கூறினாலும் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஜனாதிபதி முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதாக ஆட்சியாளர்கள் தலதா மாளிகையில் எழுதி கையொப்பமிட்டு கொடுத்தும் அந்தக் கதிரைக்குச் சென்ற பின் அதனை மறந்து விட்டிருக்கிறார்கள். தனக்கு பட்டம் பதவிகளில் ஆசைகள் இல்லாத காரணத்தினால் தான் அதிகாரத்திற்கு வந்த உடனே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாது செய்து பாராளுமன்றத்தை மையமாகக் கொண்ட ஜனநாயக ஆட்சி முறையை உருவாக்குவேன் என்று…

Read More

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வட்வரி நீக்கப்படும்.

எதிர்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மருந்துகள், பாடசாலை கற்றல் உபகரணங்கள், உணவுப்பொருட்கள் மீதான வட்வரி நீக்கப்படும் என கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். தங்காலையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் எளிமைப்படுத்தப்பட்ட வரிமுறைமை அறிமுகப்படுத்தப்படும்,மதுபான உற்பத்தியாளர்கள் போன்ற வர்த்தகர்கள் செலுத்த தவறிய வரியை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என தெரிவித்துள்ளார். மருந்துகள் மருத்துவபொருட்கள் மீதான வட் வரியை நீக்குவோம்,பாடசாலை பொருட்கள் மேலதிக வாசிப்பு புத்தகங்கள் மீதான…

Read More

குமாரி முனசிங்க சஜித்திற்கு ஆதரவு.

எமது நாட்டின் பழம்பெரும் பிரபல நடிகரும், சின்னத்திரை நட்சத்திரங்களில் ஒருவருமான காலஞ்சென்ற ஜாக்சன் அந்தோனியின் பாரியாரான திருமதி குமாரி முனசிங்க அவர்கள் 2024 ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு தனது ஆதரவை வழங்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

Read More

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடியை பயன்படுத்த வேண்டாம்

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்தினால் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும், இது தொடருமானால் இன்னும் சில நாட்களில் தேசிய கீதம் கட்சியின் பாடலாக மாறும் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். இவ்வருட ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்குத் தெளிவூட்டும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

விவசாயத்துறை எமது நாட்டுக்கு பொருத்தமான ஒன்றாக இருக்காது என ஜனாதிபதி கூறினார் – சஜித்

நில் வளவை கங்கை பெருக்கெடுத்து மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்  பல தடவைகள் பாராளுமன்றத்தில் நான் உட்பட ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக  கருத்து வெளியிட்டுள்ளோம். அரசாங்கம் அதனை ஒரு சதத்திற்கேனும் கருத்தில் கொள்ளவில்லை. இது தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழு ஒன்றை நிறுவியிருந்த சந்தர்ப்பத்தில், நட்ட ஈடு கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு நட்டை ஈடு வழங்குமாறு நாங்கள் கோரிக்கை விடுத்த போது, அந்தப் பிரதேசத்தில் உள்ள  பத்தாயிரம் ஏக்கர் வயல் காணிகளை…

Read More