Headlines

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த ஜீவன்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  சந்தோஷ் ஜாவை, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்தித்து  கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நேற்று (18) மாலை இந்த சந்திப்பானது இடம்பெற்றிருந்தது. இதன்போது “இந்திய வீடமைப்பு திட்டம், நீர் கட்டண திருத்தம், சமகால அரசியல், கல்வி மற்றும் மலையக அபிவிருத்தி சார் விடயங்கள்” தொடர்பாக இருவருக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றது

Read More

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு.

லங்கா சதொச நிறுவனத்தினால் வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விலை மாற்றங்கள் இன்று (19) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் அமுலுக்கு வருமென தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ உளுந்து                                  ரூ. 100 குறைப்பு         …

Read More

நிமல் சிறிபால டி சில்வாவிற்கு மீண்டும் அழைப்பாணை

எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி விடயங்களை முன்வைக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்ப நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கொழும்பு 10 – டி.பி ஜயா மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தை கடந்த 5 ஆம் திகதி பூட்டி வைத்தமை தொடர்பிலேயே மாளிகாகந்த நீதவான் லோச்சனீ அபேவிக்ரம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள்…

Read More

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில்.

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் இந்த வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 83 ( பி ) பிரிவை 6 ஆண்டுகளுக்குப் பதிலாக 5 ஆண்டுகளாக திருத்த இந்த வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த வரைவு  வர்த்தமானியாக  வெளியிடுவதனை நிறுத்துமாறு அமைச்சு செயலாளருக்கு தான் அறிவித்ததாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ நேற்று (18) தெரிவித்தார். ஆனால் இன்று (19) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின்…

Read More

ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்ட அநுர

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். நேற்றைய தினம் (18) அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். தேசிய மக்கள் சக்தியின் வெளிவிவகாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜப்பானில் வாழ்கின்ற இலங்கையர்களுடனான சந்திப்பில் பங்கேற்பதற்காக அவர் சென்றுள்ளார். அதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை 2.00 மணிக்கு ஜப்பானில் Tsukuba இல் Yatabe Citizen Hall இல் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதுடன், திங்கட்கிழமை (22) ஜப்பானில் உள்ள…

Read More

ஒரு முட்டையில் 25 ரூபாய் லாபம்.

ஒரு முட்டை மூலம் உற்பத்தியாளர்கள் 25 ரூபாய் நியாயமற்ற லாபம் பெறுவதாக முட்டை வர்த்தக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தற்போது ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு சுமார் 20 ரூபா செலவாகும் என அதன் தலைவர்  அனுர மாரசிங்க குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அனுர மாரசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில், பண்ணைகளில் இருந்து 45 ரூபா தொடக்கம் 50 ரூபா வரையிலான விலைக்கு மொத்த விற்பனையாளர்களுக்கு விற்கப்படுவதால், சந்தையில் முட்டை ஒன்றின் விலை தற்போது 50 ரூபாவைத்…

Read More

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் அமைதியற்ற நிலை – கலகத்தடுப்பு பொலிஸார் வரவழைப்பு

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் இன்று (19)  அமைதியற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குடிவரவு – குடியகல்வு திணைக்களத்துக்கு முன் பதிவு இன்றி அதிக எண்ணிக்கையானோர்  வருகை தந்தமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குடிவரவு –  குடியகல்வு திணைக்களத்துக்கு முன்பாக நீண்ட வரிசைகளும் நெரிசலும் காணப்பட்டதுடன் பொலிஸாருக்கும் கலகத் தடுப்புப் பிரிவினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இன்று முதல் அனைத்து விண்ணப்பதாரர்களும் குடிவரவுத் திணைக்களத்துக்கு வருவதற்கு முன்னர் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்ய…

Read More

மோட்டார் சைக்கிள் – அம்பியூலன்ஸ் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞன் பலி

மோட்டார் சைக்கிள் ஒன்றும் அம்புலன்ஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இந்த விபத்து இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது. காலி – கொழும்பு வீதியில் தருன சேவா மாவத்தை அருகே, காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பலபிட்டிய வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியுலன்ஸ் வாகனம் எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர்…

Read More

திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க ஜப்பான் தயார்.

கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், கடந்த காலத்தில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட ஜப்பானிய உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியின் (ODA) கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய தூதுக்குழுவின் தலைவர் கலாநிதி இசுமி ஹிரோடோ (Izumi Hiroto) தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் கைகோர்த்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவுடன் இணைந்து மிகக் குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை எட்டியதன் ஊடாக ஜனாதிபதி ரணில்…

Read More

நிலந்த ஜயவர்தனவுக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவை இன்று (18) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்டாய விடுமுறையில் வைக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தற்போது நிலந்த ஜயவர்தன சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக (நிர்வாகம்) கடமையாற்றுகிறார்.

Read More