சசிகலாவுக்கு பதிலாக சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு

(UDHAYAM, CHENNAI) – சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு சசிகலா தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அ.தி.மு.க.வின் சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கு சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கான 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. அவர்களை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்க முடியாது.

Read More

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் புதிய தலைவர் நியமனம்

(UDHAYAM, ENGLAND) – இங்கிலாந்து கிரிக்கட் அணியின் தலைவராக அந்த அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் ஆன ஜோ ரூட் நியமிக்கப்பட்டுள்ளார். பென் ஸ்டோக்ஸ் துணைத்தலைவர் ஆவார். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக இருந்தவர் அலஸ்டைர் குக். சமீபத்தில் இங்கிலாந்து அணி பங்களாதேஷிற்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்தியாவிற்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடியது. பங்களாதேஷிற்கு எதிரான தொடரை 1-1 என சமன் செய்த இங்கிலாந்து, இந்தியாவிற்கு எதிரான…

Read More

சொத்து குவிப்பு வழக்கு:நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சம்!!!

(UDHAYAM, CHENNAI) – சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கு சொத்து குவிப்பு வழக்கு தொடர்பில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சம் பின்வருமாறு. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை, சிறப்பு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உறுதி செய்தது. விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உடனடியாக 3 பேரும் சரணடையவும் தீர்ப்பு வழங்கியது.  

Read More

அரிசியை அதிக விலையில் விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – அரசாங்கம் விதித்துள்ள ஆக்ககூடிய சில்லறை விலைக்கு அரிசியை விற்பனை செய்யாத மற்றும் அரிசியை பதுக்கி வைப்போர் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவிக்கமுடியும். இது தொடர்பான தகவல்களை 1977 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்தின் மூலம் அதிகார சபைக்கு அறிவிக்குமாறு சபை பொதுமக்களிடம் அறிவித்துள்ளது. அரிசிக்கு ஆகக்கூடிய விலையை விதிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்துடன் நாட்டின் பல பிரதேசங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கம் உறுதிசெய்துள்ள விலைக்கு…

Read More

மீண்டும் எல்லை மீறிய அமலாபால்; ரசிகர்கள் கொந்தளிப்பு

(UDHAYAM, CHENNAI) – விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால், தற்போது வட சென்னை, திருட்டு பயலே 2 படங்களில் நடித்து வருகிறார். மேலும் முன்பைவிட டிவிட்டரில் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார். தனது கவர்ச்சி செல்ஃபிக்களையும் அவ்வப்போது அப்லோட் செய்த வண்ணம் உள்ளார். அந்தவகையில் தற்போது தனது நண்பர் ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளார் அமலாபால். இதைப்பார்த்த ரசிகர்கள் ஏன் இப்படி சீப்பாக பப்ளிசிட்டி தேடிக்கொள்கிறீர்கள் என…

Read More

மூதூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்

(UDHAYAM, COLOMBO) – மூதூர் வலய கல்வி பணிப்பாளரை இடமாற்றுமாறு கோரி மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த அல் மினா,அல் ஹிதாய,அல் ஹிலால்,அல் மினார், ஆகிய பாடசாலைகளைச்சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து மூதூர் வலய கல்வி அலுவலகத்திற்கு முன் இன்று காலை 8.00 மணி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வலய கல்வி பணிப்பாளர் ஆசிரியர்களை அவமானப்டுத்தினார் எனக்கூறியே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பாடசாலைகளில் நடக்கும் பிழைகளை தட்டிக்கேட்டதனால் தமக்கு எதிராக தன்னால் அடையாளப்படுத்தபட்டவர்களே தமக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதாக…

Read More

வடகொரியா ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக பரிசோதிப்பு…

(UDHAYAM, NORTH KOREA) – வடகொரியாவினால் ஏவுகணை ஒன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக வடகொரிய தலைவர் கிம் ஜொங் வுன் தெரிவித்துள்ளார். கொரிய அரச ஊடகத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. தொலைதூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை ஒன்றே இவ்வாறு நேற்று சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையானது புதிய வகை முயற்சியாக அமைந்துள்ளதாக வடகொரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது. அணு ஆயுத உற்பத்தி, ஏவுகணை பரிசோதனை என்பவற்றிற்கு எதிராக சர்வதேசம், வடகொரியா மீது பல்வேறு…

Read More

இலங்கையில் நடைபெறும் பௌத்த மாநாட்டிற்கு சீனாவின் பூரண ஒத்துழைப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் நடைபெறவுள்ள பௌத்த மாநாட்டிற்கு சீனாவின் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று இலங்கைக்கான சீனத் தூதுவர் லீயூ சியான் தெரிவித்துள்ளார். இலங்கை – சீன ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்கள  பூர்த்தியாவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் அவர் உரையாற்றினார். இந்த வைபவம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று ஆரம்பமானது. இது 12 ஆம் திகதி வரை வரை நடைபெறவுள்ளது. இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தி, இலங்கையின் பொருளாதார கலாசார அபிவிருத்திக்கும்…

Read More

மக்கள் சேவையில் பிரிந்து இருக்காமல் ஒன்றுபட்டு பொறுப்புக்களை நிறைவேண்டும் – கொட்டகலையில் ஜனாதிபதி தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – மக்கள் சேவையை நிறைவேற்றுவதில் பிரிந்து இருக்காமல் நாட்டுக்காக ஒன்றுபட்டு பொறுப்புக்களை நிறைவேற்றுமாறு தேசிய, மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளிடமும் தான் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று  பிற்பகல் கொட்டகலை சீ.எல்.எப்.தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அனைத்து பிரஜைகளையும் அரசாங்கம் சமமான வகையிலேயே நோக்குவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுப்பதில்…

Read More

இன்றைய நாணய மாற்று விகிதம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 148 ரூபா 40 சதம் விற்பனை பெறுமதி 152 ரூபா 33 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 184 ரூபா 88 சதம். விற்பனை பெறுமதி 191 ரூபா 19 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 159 ரூபா 21 சதம் விற்பனை பெறுமதி 165 ரூபா 28 சதம். சுவிஸ்…

Read More