ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கம்

ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் இன்று (18) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தையடுத்து அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்த போதிலும், பின்னர் அது சுனாமி நிலை அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் பகுதியில் ஏற்பட்டுள்ளதுடன், முதல் நிலநடுக்கத்திற்குப் பிறகு பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது….

Read More

ஜனாதிபதி ரணிலுக்கு வழங்கிய சிலிண்டர் சின்னம் தொடர்பில் முறைப்பாடு.

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள சிலிண்டர் சின்னத்தை இரத்து செய்து அவருக்கு பிறிதொரு சின்னத்தை வழங்குங்கள். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எமக்கு வழங்கியுள்ள சிலிண்டர் சின்னத்தை எவ்வாறு சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க முடியும் என மக்கள் போராட்ட சிவில் அமைப்பின் பொதுச்செயலாளர்  ஜனக பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில்  வெள்ளிக்கிழமை (16)  முறைப்பாடளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் குறிப்பிட்டதாவது, 2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சி…

Read More

தப்பியோடிய சஜித்தும், அனுரவும் மக்களின் கஷ்டங்கள் பற்றி பேசுவது வேடிக்கையானது – ஜனாதிபதி ரணில்.

“இயலும் ஸ்ரீலங்கா” தேர்தல் மேடையானது நாட்டை பிரிக்கும் இடமல்ல. மாறாக அனைவரும் ஒன்றிணைவதற்கான மேடையென தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதே தனது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார். உங்களது அனுராதபுரம் சல்காது மைதானத்தில் இன்று (17) நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ பொதுக்கூட்டத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்படும் தொடர்…

Read More

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, குறைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலைகள் பின்வருமாறு: ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசி – 200 ரூபாய் ஒரு கிலோ உருளைக்கிழங்கு – 215 ரூபாய் ஒரு கிலோ வெள்ளை சீனி – 247 ரூபாய் ஒரு கிலோ பருப்பு – 278 ரூபாய் ஒரு கிலோ கடலை – 441 ரூபாய் ஒரு கிலோ காய்ந்த மிளகாய் – 785…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை நல்க தீர்மானித்துள்ளார். இதன் பிரகாரம், இன்று மாத்தறை அகுரெஸ்ஸ நகரில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் மூன்றாவது பேரணியில் கலந்து கொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

Read More

ரணிலின் முதலாவது பொதுக் கூட்டம் இன்று.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முதலாவது பொதுக்கூட்டம் இன்று (17) பிற்பகல் அனுராதபுரம் சல்தாது விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் நூறு பொதுக்கூட்டங்களை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளில் இருந்து ஆதரவு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பலரும் இதில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சற்று முன்னர் அநுராதபுர…

Read More

சஜித்திற்கு அதிகரிக்கும் ஆதரவு

இந்நாட்டின் மிகவும் அனுபவம் வாய்ந்த, சிரேஷ்ட மற்றும் நன்மதிப்பு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவரான மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் சகோதரியின் மகளான திருமதி சஞ்சல குணவர்தன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். மங்கள சமரவீரவின் மரணத்தின் பின்னர் அவரது குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு பிரவேசித்த முதல் நபராக சஞ்சல குணவர்தனவை குறிப்பிடலாம். இவ்வாறு அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டதன்…

Read More

அலி சாஹிர் எம் பியிடம் விளக்கம் கோரியது முஸ்லிம் காங்கிரஸ்

கட்சியின் தீர்மானத்தை மீறி செயற்பட்டு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடிவு செய்த அலி சாஹிர் மௌலானா எம். பி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , கட்சியிலிருந்து இடைநிறுத்தி, அவரிடம் விளக்கம் கோரும் கடிதத்தை அனுப்பியுள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்

Read More

நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைவர் ரணிலே – வேலுகுமார் எம்.பி

“நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைவர் ரணிலே. அவருக்கு ஈடான அறிவு, அனுபவம், இயலுமை கொண்ட வேறு தெரிவுகள் இல்லை” என வேலுகுமார் எம். பி. அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இம்முறை ஜனாதிபதி தேர்தலில், ரணில் விக்ரமசிங்க நாட்டுக்காகவே போட்டியிடுகின்றார். ஒரு கட்சி சார்ந்தோ, ஒரு குழுவினர் சார்ந்தோ அல்லாமல் சுயாதீன வேட்பாளராகவே களம் இறங்கியுள்ளார். நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைவர் ரணிலே. அவருக்கு ஈடான அறிவு, அனுபவம், இயலுமை கொண்ட வேறு தெரிவுகள் இல்லை. எனவே…

Read More

மழையுடனான வானிலை இன்றும் தொடரும் – மண்சரிவு எச்சரிக்கை.

நாட்டில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக களுத்துறை, மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. நிலம் மற்றும் சுவர்களில் விரிசல்கள் ஏற்படுதல், மரங்கள், வேலிகள் மற்றும் மின்கம்பங்கள் சாய்தல், திடீரென நீரூற்றுகள் தோன்றல், சேற்று நீர் வெளியேறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அனர்த்த முகாமைத்துவ மையத்தின் 117 என்ற இலக்கம் ஊடாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல்…

Read More