சமையல் எரிவாயு சின்னம் ஜனாதிபதிக்கு கிடைத்த இறைவனின் ஆசிர்வாதம்
சமையல் எரிவாயு வரிசையை முடிவுக்கு கொண்டுவந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னமாக கிடைத்திருப்பது இறைவனின் ஆசிர்வாதமாகும். மக்களின் இதயத்தை தொடக்கூடிய இந்த சின்னம், நிச்சயமாக ரணிலை வெற்றிபெறச்செய்யும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டு மக்கள் சமையல் எரிவாயுக்காக…